இன்று அதிகாலை தமிழக கடற்கரையை ஒட்டிய பாக் விரிகுடாவில் இந்திய கடற்படையினரால் சந்தேகத்திற்குரிய படகை தடுத்து நிறுத்த பாதுகாப்பு அதிகாரி துப்பாக்கிச் சூடு நடத்தியதில், படகில் இருந்த ஒருவர் காயமடைந்தார்.
சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னதாக இந்தியா இலங்கை சர்வதேச கடல் எல்லைக் கோட்டிற்கு மிக அருகில் உள்ள பாக் விரிகுடாவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படைக் கப்பலானது சந்தேகத்திற்குரிய வகையில் அங்கு இருந்த படகின் நடமாட்டத்தை கண்டறிந்தனர்.
இதையடுத்து படகிற்கு அருகில் சென்ற இந்திய கடற்படை கப்பல் பலமுறை எச்சரித்தும், படகு நிற்கவில்லை. இதையடுத்து கடற்படை கப்பல், வழக்கமான இயக்க நடைமுறைகளின்படி, படகை நிறுத்த எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் சந்தேகத்திற்கிடமான படகில் இருந்த பணியாளர்களில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
காயமடைந்த நபருக்கு கப்பல் மூலம் முதலுதவி அளிக்கப்பட்டு, இந்திய கடற்படை சேடக் ஹெலிகாப்டர் மூலம் ராமநாதபுரம் உச்சிப்புளியில் உள்ள ஐஎன்எஸ் பருந்து தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, மேல் மருத்துவ சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…