டெல்லியில் பெண்ணை பழி வாங்க கடத்திச் சென்று இரண்டு நாட்களாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து சாக்கு மூட்டையில் கட்டி தூக்கி வீசிய கொடூர சம்பவம் அரங்கேறியது.
காசியாபாத் சாலையில் பெண் ஒருவர் சாக்கு மூட்டையில் கிடப்பதாக தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், அவரை மீட்டு மருத்துவாமணையில் அனுமதித்துள்ளனர். அவரை பரிசோதனை செய்யும் போது அந்த பெண் இரண்டு நாட்களாக கூட்டு பாலியல் தொல்லைக்கும், கொடூரமான சித்திரவதைக்கும் ஆளானது தெரிய வந்தது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சிகிச்சைக்கு பின்னர் அந்த பெண்ணிடம் விசாரித்த போது, நந்த் நகரை சேர்ந்த அவருக்கும் சிலருக்கும் சொத்து பிரச்சனை இருப்பதாக கூறியுள்ளார். மேலும் அவர் காசியாபாத் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது காரில் வந்த ஐந்து பேர் கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் இரண்டு நாட்களாக ஐந்து பேரும் தொடர்ந்து அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததோடு, அவரை அடித்து சித்திரவதை செய்துள்ளனர். அது மட்டும் இல்லாது அவரை சாக்கு மூட்டையில் கட்டி சாலையில் வீசிய சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் நான்கு பேரை போலீசாரி கைது செய்துள்ளனர். அதில் ஒருவர் ஷாருக் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. மெங்கும் விசாரணையை தீவிர படுத்தி, தாக்கல் செய்யா போலீசாருக்கு மகளின் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நிர்பயா வழக்கு போலவே இந்த சம்பவமும் அனைவருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. எப்போது தான் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்குமோ என்று மக்கள் கேள்வி கேட்டகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…