இந்தியாவில் பல்வேறு முக்கிய நகரங்களுக்கு இடையேயான ரயில் சேவையை மேம்படுத்துவதற்காகவே 'வந்தே பாரத் திட்டம்' என்ற அதிவேக விரைவு ரயில் திட்டம் துவங்கப்பட்டது. தற்போது இதுவே மிகவும் பிரபலமான போக்குவரத்து முறையாகவும் மாறியுள்ளது. இந்தியாவில் உள்ள மற்ற ரயில்களை விட மிக வேகமாகவும், இலகுவாகவும் இருக்கிறது. இது பயண நேரத்தை குறைப்பதோடு மட்டுமல்லாமல், பயணிகளுக்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கிறது. ரயிலில் தானியங்கி கதவுகள், குளிர்சாதன வசதி, Wifi வசதி, ஜிபிஎஸ், ஆடியோ, வீடியோ, பயோ டாய்லெட்டுகள் என பல அதிநவீன வசதிகள் உள்ளன.
அக்டோபர் 13, 2022 அன்றிலிருந்து இந்தியாவின் 4வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நியூ டெல்லி முதல் அம்ப் ஆண்டௌரா வரை இயக்கப்படுகிறது. இந்த பதிவில் நியூ டெல்லி - அம்ப் ஆண்டௌரா வந்தே பாரத் ரயிலின் வழித்தடம், நேர அட்டவணை, கட்டணம் குறித்த முழுவிபரங்களை பார்க்கலாம்.
வழி:
இந்த ரயில் வாரத்தில் வெள்ளிக்கிழமை தவிர்த்து மற்ற அனைத்து நாட்களும் இயக்கப்படுகிறது. நியூ டெல்லியில் இருந்து அம்ப் ஆண்டௌரா செல்லும் இந்த ரயில் அம்பாலா கான்ட். சந்திப்பு, சண்டிகர் சந்திப்பு, ஆனந்த்பூர் சாஹிப், உனா ஹிமாச்சல் ரயில் நிலையங்களில் நின்று செல்லும். நியூ டெல்லி - அம்ப் ஆண்டௌரா [412 கி.மீ தூரம்] மற்ற ரயில்களைக் காட்டிலும், வந்தே பாரத் வெறும் 5.15 மணி நேரத்தில் சென்றுவிடுகிறது.
வந்தே பாரத் இரயில் |
துவங்கப்பட்ட நாள் |
இயங்கும் நாள் |
தூரம் |
பயண நேரம் |
புறப்படும் / வந்தடையும் நேரம் |
நியூ டெல்லி - அம்ப் ஆண்டௌரா [எண்: 22447]
அம்ப் ஆண்டௌரா - புது டெல்லி [எண்: 22448] |
அக்டோபர் 13, 2022 |
வெள்ளிக்கிழமை தவிர மற்ற ஆறு நாட்களும் இயங்கும் |
412 கிமீ |
5.15 மணி நேரம் |
05.50 AM - 11.05 AM
01.00 PM – 06.25 PM |
நியூ டெல்லி - அம்ப் ஆண்டௌரா வந்தே பாரத் ரயில் நேர அட்டவணை [எண்:22447]:
தினமும் காலை 5.50 மணிக்கு நியூ டெல்லியில் இருந்து புறப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் காலை 08.00 மணிக்கு அம்பாலா கான்ட். சந்திப்பையும், காலை 08.40 மணிக்கு சண்டிகர் சந்திப்பையும், காலை 10.00 -க்கு ஆனந்த்பூர் சாஹிப்பையும், காலை 10.34 -க்கு உனா ஹிமாச்சலையும் சென்றடையும். பின்னர், காலை 10.34 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு காலை 11.05 மணிக்கு அம்ப் ஆண்டௌரா ரயில் நிலையத்திற்கு வந்தடையும்.
நியூ டெல்லி - அம்ப் ஆண்டௌரா [எண்: 22447] |
வந்தடையும் நேரம் |
புறப்படும் நேரம் |
நியூ டெல்லி |
- |
05.50 AM |
அம்பாலா கான்ட். சந்திப்பு |
08.00 AM |
08.02 AM |
சண்டிகர் சந்திப்பு |
08.40 AM |
08.45 AM |
ஆனந்த்பூர் சாஹிப் |
10.00 AM |
10.02 AM |
உனா ஹிமாச்சல் |
10.34 AM |
10.36 AM |
அம்ப் ஆண்டௌரா |
11.05 AM |
- |
அம்ப் ஆண்டௌரா - நியூ டெல்லி வந்தே பாரத் ரயில் நேர அட்டவனை [எண்:2248]:
மறுமார்க்கமாக அம்ப் ஆண்டௌரா ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 01.00 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மாலை 06.25 மணிக்கு நியூ டெல்லி வந்தடையும்.
அம்ப் ஆண்டௌரா - நியூ டெல்லி [எண்: 22448] |
வந்தடையும் நேரம் |
புறப்படும் நேரம் |
அம்ப் ஆண்டௌரா |
- |
01.00 PM |
உனா ஹிமாச்சல் |
01.21 PM |
01.23 PM |
ஆனந்த்பூர் சாஹிப் |
02.08 PM |
02.10 PM |
சண்டிகர் சந்திப்பு |
03.25 PM |
03.30 PM |
அம்பாலா கான்ட். சந்திப்பு |
04.13 PM |
04.15 PM |
நியூ டெல்லி |
06.25 PM |
- |
கட்டணம்:
இந்த ரயிலுக்கான டிக்கெட் கட்டணம் பயண வகுப்பை பொறுத்து மாறுபடும். அதன்படி, இந்த வந்தே பாரத் ரயிலில் நியூ டெல்லி முதல் அம்ப் ஆண்டௌரா வரை செல்ல சேர் காரில் ரூ.1075 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதேபோல், எக்ஸிகியூட்டிவ் வகுப்பில் ரூ.2045 வசூலிக்கப்படுகிறது.
மறுமார்க்கமாக, அம்ப் ஆண்டௌரா முதல் காசர்கோடு வரை செல்ல சேர் காரில் உணவுடன் சேர்த்து ரூ.1240 கட்டணமாக வசூலிக்கப்படும். அதேபோல், எக்ஸிகியூட்டிவ் வகுப்பில் உணவுடன் சேர்த்து ரூ.2240 கட்டணமாக வசூலிக்கப்படும். உணவு தேர்வு என்பது இந்த ரயிலில் பயணிகளின் விருப்பம்தான். டிக்கெட் புக் செய்யும் போதே உணவு ஆப்ஷன் வேண்டாம் என தேர்வு செய்துவிட்டால் ரயில் பயண கட்டணத்தில் உணவு கட்டணம் வசூலிக்கப்படாது.
வந்தே பாரத் ரயில் |
உணவு கட்டணம் இல்லாமல் |
உணவு கட்டணம் சேர்த்து |
||
சேர் கார் |
எக்ஸிகியூட்டிவ் வகுப்பு |
சேர் கார் |
எக்ஸிகியூட்டிவ் வகுப்பு |
|
நியூ டெல்லி - அம்ப் ஆண்டௌரா [எண்: 22447] |
ரூ.955 |
ரூ.1890 |
ரூ.1075 |
ரூ.2045 |
அம்ப் ஆண்டௌரா - நியூ டெல்லி [எண்: 22448] |
ரூ.955 |
ரூ.1890 |
ரூ.1240 |
ரூ.2240 |
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…