Sun ,Dec 10, 2023

சென்செக்ஸ் 69,825.60
303.91sensex(0.44%)
நிஃப்டி20,969.40
68.25sensex(0.33%)
USD
81.57
Exclusive

தொடங்கிய சில நாட்களிலேயே விபத்து.. வந்தே பாரத் ரயில் முன்பகுதி சேதம்!!

Sekar October 06, 2022 & 16:54 [IST]
தொடங்கிய சில நாட்களிலேயே விபத்து.. வந்தே பாரத் ரயில் முன்பகுதி சேதம்!!Representative Image.

மும்பை சென்ட்ரல் முதல் குராஜாத்தின் காந்திநகர் இடையே ஓடும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இன்று காலை 11.15 மணியளவில் வத்வா ஸ்டேஷனுக்கும் மணிநகர் ஸ்டேஷனுக்கும் இடையே ரயில் பாதையில் எருமைகள் கூட்டம் மோதியதில் விபத்துக்குள்ளானதாக மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இந்த விபத்தினால் என்ஜினின் முன்பகுதி சேதமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மும்பை-காந்திநகர் வந்தே பாரத் செல்லும் வழியில் 3-4 எருமை மாடுகள் திடீரென வந்து எஃப்ஆர்பியால் செய்யப்பட்ட ரயில் முன்பகுதியை சேதப்படுத்தியது. இருப்பினும், இதனால் ரயிலின் எந்த செயல்பாட்டு பகுதியும் சேதமடையவில்லை. 

8 நிமிடங்களுக்குள் எருமைகளின் சடலங்களை அகற்றி, ரயில் மீண்டும் கிளம்பி காந்திநகரை சரியான நேரத்தில் அடைந்தது.

கைரத்பூர்-வத்வா நிலையத்திற்கு இடையே 11:18 மணிக்கு இந்த சம்பவம் நடந்தது. கால்நடைகளை தண்டவாளத்திற்கு அருகில் விட வேண்டாம் என ரயில்வே நிர்வாகம் அருகிலுள்ள கிராம மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் நிலையிலும் இது போன்ற சம்பவங்கள் அவ்வப்போது நடந்த வண்ணமே உள்ளன.

காந்திநகரில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கிவைத்த சில நாட்களுக்குப் பிறகு இந்த விபத்து நடந்தது, மேலும் பிரதமர் காந்திநகரில் இருந்து அகமதாபாத்தில் உள்ள கலுபூர் ரயில் நிலையத்திற்கு இந்த ரயிலில் பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்