கும்பகோணம் அருகே உள்ள சோழபுரத்தில் வசிக்கும் சரண்யா மற்றும் சேகர் என்பவருக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு இன்று திருமணம் நடந்தது.
இந்நிலையில் திருமணம் முடிந்து புதுமண தம்பதிகள் இருவரும் ஊருக்குள் அழைத்துவரப்பட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த மணமகள் சரண்யாவின் சகோதரன் சக்திவேல் மற்றும் அவரது நண்பர் ரஞ்சித் ஆகியோர் இணைந்து அரிவாளால் சரமாரியாக தம்பதிகள் இருவரையும் வெட்டியுள்ளனர். இந்த தாக்குதலில் இருவரும் சம்பவ இடத்திலே ரத்தவெள்ளத்தில் உயிரிழந்தனர்.
இதனையடுத்து எதற்காக கொலை செய்யப்பட்டது என்ற காரணம் குறித்தும் தலைமறைவான சக்திவேல் மற்றும் அவரது நண்பர் ரஞ்சித் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…