நைஜீரியா நாட்டில் அனம்பிரா மாகாணத்தில் ஆக்பாரு பகுதியில் 85 பேரை ஏற்றி கொண்டு படகு ஒன்று சென்றுள்ளது. அப்போது திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் படகு சிக்கி கொண்டது. இதனால், படல் இருந்தவர்கள் அனைவரும் பயத்தில் அலறியுள்ளனர். நீச்சல் தெரியாத பலரும் நீரில் மூழ்கியுள்ளனர். அவர்களில் 76 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மீதமுள்ளவர்களை காணவில்லை.
இதுபற்றி தகவல் அறிந்து மீட்பு மற்றும் நிவாரண பணி குழுக்களை சேர்ந்தவர்கள் சம்பவ இடத்துக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து அதிபர் முகமது புகாரி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த படகு விபத்து போன்று வருங்காலங்களில் வேறு சம்பவங்கள் எதுவும் நடக்காமல் இருப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறும், ஆய்வு மநேர்கொள்ளவும் அதிகாரிகளுக்கு அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…