Wed ,Feb 01, 2023

சென்செக்ஸ் 59,330.90
-874.16sensex(-1.45%)
நிஃப்டி17,604.35
-287.60sensex(-1.61%)
USD
81.57
Exclusive

அப்போ லீவ் இல்லியா.. மாணவர்களுக்கு ஷாக் கொடுத்த அமைச்சர் அன்பில் மகேஷ்!!

Sekar Updated:
அப்போ லீவ் இல்லியா.. மாணவர்களுக்கு ஷாக் கொடுத்த அமைச்சர் அன்பில் மகேஷ்!!Representative Image.

ஜனவரி 18 ஆம் தேதி தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை எதுவும் அறிவிக்கப்படவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை ஒய்.எம்.சி.ஏ. திடலில் தற்போது புத்தகக் கண்காட்சி நடந்து வருகிறது. இதில் ஒரு அங்கமாக சர்வதேச புத்தக கண்காட்சியும் தொடங்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று சர்வதேச புத்தகக் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழ் இலக்கியங்களை உலகம் முழுவதும் கொண்டு செல்ல அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இந்தப் புத்தகக் கண்காட்சியில் எழுத்தாளர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர் என்றும், இதில், பங்கேற்க முடியாத வெளிநாட்டு பதிப்பாளர்கள் வீடியோ கான்பெரன்ஸ் மூலம் பங்கேற்கலாம் என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அமைச்சர், வரும் ஜன்வரி 18 ஆம் தேதி தமிழகத்தில் பள்ளிககளுக்கு விடுமுறை எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றும், பொங்கலுக்குப் பின் புதன்கிழமை விடுமுறை அளிப்பது பற்றி அரசு முடிவு எதுவும் எடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்