ஐநா மனிதாபிமான செயல்பாடுகள் பிரிவின் தலைவர் மார்டின் கிரிஃபித், ரஷ்ய அதிகாரிகளை சந்தித்து உணவு தானியங்களை ஏற்றுமதி செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு 100வது நாளை எட்டியுள்ளது. இதையடுத்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி காணொளி மூலம் நாட்டு மக்களிடம் உரையாடினார். அப்போது அவர், ரஷ்ய ராணுவத்தினர் 20 சதவீதம் நிலப்பரப்பை ஆக்கிரமித்துள்ளனர். உக்ரைனின் கிழக்கு டான்பாஸ் பகுதியில் ரஷ்யப் படைகள் தங்கள் பிடியை இறுக்கி வருகின்றன. ரஷ்ய ராணுவத்திற்கு எதிராக நம்மை காத்துக்கொள்வது அவசியம் என கூறினார்.
இந்நிலையில் ரஷ்ய போரினால் பாதுக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா, ஜூன் 1ம் தேதி நீண்ட தூரம் சென்று தாக்கும் அதிநவீன ஏவுகணைகளை வழங்கியது. இந்த ஏவுகணைகளை கொண்டு ரஷ்ய நிலப்பரப்புகள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தும் என கூறப்பட்டு வந்த நிலையில், அமெரிக்க ஏவுகணைகளை வைத்து ரஷ்ய நிலப்பரப்புகளை தாக்கும் திட்டம் இல்லை. நாங்கள் பாதுகாப்பிற்காக போர் செய்கிறோம். அடுத்த நாட்டை தாக்கும் எண்ணம் இல்லை’ என உக்ரைன் கூறியுள்ளது.
ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக, இரு நாடுகளில் இருந்தும் உற்பத்தி செய்யப்பட்ட உணவு தானியங்கள் ஏற்றுமதி செய்யப்படாமல் இருக்கிறது. இதனால் உலக அளவில் உணவு பற்றாக்குறை ஏற்பட்ட வாய்ப்பிருப்பதாக ஐநா எச்சரித்து வருகிறது. இந்நிலையில் ஐநா மனிதாபிமான செயல்பாடுகள் பிரிவின் தலைவர் மார்டின் கிரிஃபித், ரஷ்ய அதிகாரிகளை சந்தித்து உணவு தானியங்களை ஏற்றுமதி செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தவுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…