Nobel Prize 2022: இந்த ஆண்டுக்கான பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு, அமெரிக்க பெடரல் ரிசர்வின் முன்னாள் தலைவர் பென் எஸ்.பெர்னான்கே மற்றும் இரண்டு அமெரிக்காவைச் சேர்ந்த பொருளாதார நிபுணர்களான டக்ளஸ் டபிள்யூ.டயமண்ட் மற்றும் பிலிப் எச் டிப்விக் ஆகியோருக்கு வங்கிகள் மற்றும் நிதி நெருக்கடிகள் குறித்த ஆராய்ச்சிக்காக வழங்கப்படுகிறது என ஸ்டாக்ஹோமில் உள்ள ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்ஸ் அறிவித்துள்ளது.
நோபல் பரிசு வென்றவர்களுக்கு 10 மில்லியன் ஸ்வீடிஷ் குரோனர் (கிட்டத்தட்ட $900,000) ரொக்கப் பரிசைக் மற்றும் விருது டிசம்பர் 10 அன்று வழங்கப்படும். மற்ற பரிசுகளைப் போலன்றி, பொருளாதார விருது 1895 ஆம் ஆண்டு ஆல்பிரட் நோபலின் உயிலில் நிறுவப்படவில்லை. ஆனால் ஸ்வீடிஷ் மத்திய வங்கியால் நோபலின் நினைவாக நிறுவப்பட்டது. பொருளாதாரத்துக்கான முதல் நோபல் பரிசு வெற்றியாளர் 1969 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முன்னதாக 2022 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிப்புகளின் ஒரு வார அறிவிப்புகள் அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கியது. ஸ்வீடிஷ் விஞ்ஞானி ஸ்வான்டே பாபோ, நமது நோயெதிர்ப்பு மண்டலத்தின் முக்கிய நுண்ணறிவுகளை வழங்கிய நியண்டர்டால் டிஎன்ஏவின் இரகசியங்களை கண்டறிந்ததற்காக மருத்துவத்திற்கான விருதைப் பெற்றார்.
செவ்வாய்க்கிழமை இயற்பியலுக்கான பரிசை மூன்று விஞ்ஞானிகள் கூட்டாக வென்றனர். பிரஞ்சுக்காரர் அலைன் ஆஸ்பெக்ட், அமெரிக்கன் ஜான் எஃப். கிளாசர் மற்றும் ஆஸ்திரிய ஆன்டன் ஜீலிங்கர் ஆகியோர் சிறிய துகள்கள் பிரிக்கப்பட்டாலும் ஒன்றோடொன்று தொடர்பைத் தக்கவைத்துக் கொள்ள முடியும் என்பதை கண்டறிந்ததற்காக இது அறிவிக்கப்பட்டது.
வேதியியலுக்கான நோபல் பரிசு புதன்கிழமை அமெரிக்கர்களான கரோலின் ஆர். பெர்டோஸி மற்றும் கே. பாரி ஷார்ப்லெஸ் மற்றும் டேனிஷ் விஞ்ஞானி மோர்டன் மெல்டலுக்கு "மூலக்கூறுகளை ஒன்றிணைக்கும்" முறையை உருவாக்கியதற்காக வழங்கப்பட்டது. புற்றுநோய் போன்ற நோய்களை இன்னும் துல்லியமாக கண்டறிந்து அளிக்க இந்த ஆராய்ச்சி உதவும்.
பிரெஞ்சு எழுத்தாளர் அன்னி எர்னாக்ஸ் இந்த ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசை வியாழக்கிழமை வென்றார். அமைதிக்கான நோபல் பரிசு வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெலாரஸ் மனித உரிமை ஆர்வலர் அலெஸ் பியாலியாட்ஸ்கி, ரஷ்ய குழு மெமோரியல் மற்றும் உக்ரேனிய சிவில் லிபர்ட்டிகளுக்கான மையம் ஆகிய அமைப்புகளுக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில், இன்று அமெரிக்காவைச் சேர்ந்தவர்களுக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…