Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

சிக்கன் சாப்பிட்ட செவிலியர் மரணம்; சிறுவன் உட்பட 20 பேருக்கு தீவிர சிகிச்சை!

KANIMOZHI Updated:
சிக்கன் சாப்பிட்ட செவிலியர் மரணம்; சிறுவன் உட்பட 20 பேருக்கு தீவிர சிகிச்சை!Representative Image.

கோட்டயம் மருத்துவக் கல்லூரியின் நியூரோ ஐசியூவில் பணிபுரிந்து வந்த செவிலியர் உணவு விஷமாகி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருவனந்தபுரம் பிளாமுட்டுக்கடையைச் சேர்ந்த வினோத்குமார் என்பவரது மனைவி ரேஷ்மிராஜ் (33) கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் எலும்பியல் பிரிவில் செவிலியராக பணியாற்றி வருகிறார். மருத்துவக்கல்லூரி விடுதியிலேயே தங்கி பணியாற்றி வரும் ரேஷ்மிராஜ், கடந்த 29ம் தேதி மாலை சங்கராந்தியை முன்னிட்டு மலப்புரம் குழிமந்தி என்ற ஹோட்டலில் அல்ஃபாஹாம் ஆர்டர் சாப்பிட்டுள்ளார். அதனைச் சாப்பிட்ட ஒரு மணி நேரத்திலேயே வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, ஞாயிற்றுக்கிழமை வென்டிலேட்டருக்கு மாற்றப்பட்டார். 

சிறுநீரக தொற்று காரணமாக, அவருக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டது, ஆனால் நேற்று இரவு 7.15 மணியளவில் அவர் உயிரிழந்தார். சிக்கன் சாப்பிட்டதால் செவிலியர் உயிரிழந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. ரேஷ்மிராஜ் மட்டுமின்றி 14 வயது சிறுவன் உட்பட அந்த உணவகத்தில் இருந்து சிக்கன் வாங்கி சாப்பிட்ட 20 பேர் கோட்டயம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் ஃபுட் பாய்சன் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்