Wed ,Apr 17, 2024

சென்செக்ஸ் 72,943.68
-456.10sensex(-0.62%)
நிஃப்டி22,147.90
-124.60sensex(-0.56%)
USD
81.57
Exclusive

பண்ணை வீட்டில் ரகசிய சந்திப்பு... ஓ.பன்னீர்செல்வத்தின் புதிய திட்டம்...

Muthu Kumar August 04, 2022 & 10:45 [IST]
பண்ணை வீட்டில் ரகசிய சந்திப்பு... ஓ.பன்னீர்செல்வத்தின் புதிய திட்டம்...Representative Image.

தமிழகத்தில் பிரபல அதிமுக கட்சியில் கடந்த சில நாட்களாக தலைமை பதவியை கைப்பற்றுவதில் ஓபிஎஸ் மறறும் இபிஎஸ் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், ஓபிஎஸ் தனது சொந்த ஊரான பெரியகுளத்தில் உள்ள பண்ணை வீட்டில் ஆதரவாளர்களுடன் ரகசிய ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில், அதிமுக கட்சியை கைப்பற்றுவது குறித்து சட்ட வல்லுநர்களுடனும், ஆதரவாளர்களுடனும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். 

இதனையடுத்து, கடந்த வாரத்தில் தேனி மாவட்ட நிர்வாகிகள் மட்டுமின்றி வெளிமாவட்ட நிர்வாகிகளும் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து வருகின்றனர். மேலும், எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் இருந்து ஏராளமானோர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்துள்ளனர்.

மேலும், தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் அடையாளம் காணப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கி ஓரம்கட்ட நினைப்பது வேதனையை ஏற்படுத்துவதாக நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்