Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,953.43
464.44sensex(0.64%)
நிஃப்டி22,132.90
137.05sensex(0.62%)
USD
81.57
Exclusive

முன்னாள் பிரதமர் கைது..! நீதிமன்றத்தின் முன் இன்று ஆஜர்..

Gowthami Subramani Updated:
முன்னாள் பிரதமர் கைது..! நீதிமன்றத்தின் முன் இன்று ஆஜர்..Representative Image.

முன்னாள் கிரிக்கெட் வீரராக இருந்து, அரசியல்வாதியாக மாறிய 70 வயதான இம்ரான் கான் அல்-காதர் அறக்கட்டளை வழக்கு காரணமாக கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான இம்ரான் கான், அல்-காதர் அறக்கட்டளை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர், ஊழல் வழக்கிற்காக விசாரண நடந்த சமயத்தில் கலந்து கொண்ட போது இஸ்லாமாபாத் உயர் நீதிமன்ற வளாகத்தில், தேசிய பொறுப்புடைமை பணியகத்தின் உத்தரவின் அடிப்படையில், துணை ராணுவ ரேஞ்சர்களால் கைது செய்யப்பட்டார்.

இவர், இன்று இஸ்லாமாபாத் போலீஸ் லைன் தலைமையகம் H-11-ல் ஆஜர்படுத்தப்படுவார். முன்னரே, செவ்வாய்க்கிழமை இஸ்லாமாத் உயர்நீதிமன்றம் ஆனது, இம்ரான் கானை கைது சட்டப்பூர்வமானது என தீர்ப்பளித்தது. இதனால், சில மணி நேரங்களிலேயே இம்ரானின் ஆதரவாளர்கள் லாகூர் கான்டில் உள்ள கார்ப்ஸ் கமாண்டர்கள் மாளிகைக்குள் உள் நுழைந்தனர்.

மேலும், ராணுவத் தலைமையகத்துக்கு வெளியே கூடி, கற்கள் வீசி தாக்குதல் நடத்தினர். இம்ரான் கானின் கைதுக்கு எதிராக, இம்ரான் கானின் ஆதரவாளர்கள் தெருக்களில் திரண்டதுடன், தீ வைப்பு மற்றும் கலவரங்கள் என நாடு முழுவதும் பரவியுள்ளது. இந்த தாக்குதலில் ஏராளமானோர் காயமடைந்ததாகவும், ஆறு பேர் இறக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

எதற்காக கைது செய்யப்பட்டார்?

அல்-காதிர் அறக்கட்டளை வழக்கில், இம்ரான் கான், புஷ்ரா பீபி, மேலும், இவரது கட்சியின் பிற தலைவர்கள் போன்றோர் அல்-காதர் அறக்கட்டளை வழக்கில் குற்றம் சாட்ட்ப்பட்டுள்ளனர். மேலும், இந்த வழக்கில் இம்ரான் கானின் அரசாங்கத்திற்கும், ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஒருவருக்கும் இடையே ஒப்பந்தம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த வழக்கில் இவர்கள் கைது செய்யபப்ட்டுள்ளதற்கான முக்கிய காரணம், 50 பில்லியன் ரூபாய் அளவிலான பொருளாதார பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்