Wed ,Nov 29, 2023

சென்செக்ஸ் 66,901.91
727.71sensex(1.10%)
நிஃப்டி20,096.60
206.90sensex(1.04%)
USD
81.57
Exclusive

அய்யா டீ குடிக்காதீங்கய்யா.. கெஞ்சும் அரசு.. என்ன இப்படி இறங்கிடுச்சு?

Sekar [IST]
அய்யா டீ குடிக்காதீங்கய்யா.. கெஞ்சும் அரசு.. என்ன இப்படி இறங்கிடுச்சு?Representative Image.

கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தான், இறக்குமதி செலவை கட்டுப்படுத்தும் நோக்கில், தங்கள் நாட்டு மக்களிடம் டீ குடிப்பதை குறைத்துக் கொள்ளுமாறு கெஞ்சியுள்ள சம்பவம் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு பிரதமர் ராஜபக்சே பதவி விலகியதோடு, உயிருக்கு பயந்து தலைமறைவானது அனைவருக்கும் தெரிந்த நிலையில், பாகிஸ்தானும் தற்போது இலங்கையைப் போல் திவால் நிலையை நோக்கிச் செல்கிறது.

இந்நிலையில் பாகிஸ்தானின் திட்டக்குழு அமைச்சர் ஆஹ்சன் இக்பால், "உலக அளவில் அதிக தேயிலை இறக்குமதி செய்யும் நாடாக பாகிஸ்தான் உள்ளது. கடந்த நிதியாண்டில் மட்டும் சுமார் 8,300 கோடி ரூபாய் மதிப்பிலான தேயிலை இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது நாடு கடும் நிதி நெருக்கடியில் உள்ள நிலையில், இறக்குமதி செய்யப்படும் தேயிலைக்கு பணம் செலுத்துவதன் மூலம் அந்நிய செலாவணி இருப்பு கரைந்து வருகிறது. அதனால் நாட்டின் நலன் கருதி, பாகிஸ்தான் மக்கள் தினமும் குடிக்கும் டீயின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.

எனினும் அமைச்சரின் இந்த கோரிக்கைக்கு, பாகிஸ்தான் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்நாட்டு மக்கள் சமூக வலைதளங்களில், அமைச்சர் இக்பாலை கடுமையாக விமர்சித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்