Sun ,Dec 10, 2023

சென்செக்ஸ் 69,825.60
303.91sensex(0.44%)
நிஃப்டி20,969.40
68.25sensex(0.33%)
USD
81.57
Exclusive

கண்டித்த இந்தியா.. பதறிய பாகிஸ்தான்.. விசாரணைக்கு உத்தரவு!!

Sekar June 11, 2022 & 11:54 [IST]
கண்டித்த இந்தியா.. பதறிய பாகிஸ்தான்.. விசாரணைக்கு உத்தரவு!!Representative Image.

பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சியில் ஒரு இந்துக் கோயிலை மர்ம நபர்கள் சேதப்படுத்திய விவகாரத்தில் இந்தியா கடும் கண்டணத்தைத் தெரிவித்த நிலையில், குற்றவாளிகளை விரைவாக கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், இன்னும் விசாரணை நடந்து வருவதாகவும், கடந்த புதன்கிழமை கோயிலைத் தாக்கியவர்களை அரசாங்கம் தப்பிக்க விடாது என்றும் சட்டப்படி உரிய தண்டனை வழங்கப்படும் என்றும் கூறியது.

முன்னதாக, இந்தியாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, வியாழன் அன்று கோவில் இடிபாடு குறித்து கவலை தெரிவித்தார். இது பாகிஸ்தானில் மத சிறுபான்மையினரை திட்டமிட்டு துன்புறுத்தும் மற்றொரு செயல் என்று கண்டித்தார்.

கடந்த வாரம் இந்தியாவில் இஸ்லாமிய இறைத் தூதர் முகமது நபிகள் குறித்து அவதூறாக பேசிய மத்தியில் ஆளும் பாஜகவைச் சேர்ந்த இரண்டு அரசியல்வாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான்உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தன. 

பாகிஸ்தானின் வ வழக்கமாக இந்துக்கள் மிக மோசமாக நடத்தப்பட்டு வந்தாலும், தற்போது கோவில் சிதைக்கப்பட்டது இந்த விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நடந்திருக்கலாம் என பாகிஸ்தானில் பேசப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்