Tue ,Apr 16, 2024

சென்செக்ஸ் 72,943.68
-456.10sensex(-0.62%)
நிஃப்டி22,147.90
-124.60sensex(-0.56%)
USD
81.57
Exclusive

சிங்கப்பூர் சென்ற நம்ப ஊரு சாமியாரை…நிர்வாணமாக ஓட விட்ட பாடி பில்டர் சாமியார்!

Priyanka Hochumin September 29, 2022 & 14:40 [IST]
சிங்கப்பூர் சென்ற நம்ப ஊரு சாமியாரை…நிர்வாணமாக ஓட விட்ட பாடி பில்டர் சாமியார்!Representative Image.

சிங்கப்பூர் சென்ற பட்டுக்கோட்டை சாமியாரை அடித்து நிர்வாணமாக ஓட விட்ட சிங்கப்பூர் பாடி பில்டர் சாமியார் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

கோவில் எந்த அளவிற்கு அதிகரித்து கொண்டே இருக்கிறதோ அதே போல சாமியார்களும் இப்பொழுது அதிகரித்துக்கொண்டே இருக்கின்றனர். அதில் யார் உண்மை சாமியார்? யார் போலி சாமியார்? என்று மக்கள் தெரிந்துகொள்ள மிகவும் கஷ்டமாக இருக்கிறது. பட்டுக்கோட்டை பகுதியில் மிகவும் பேமஸ் ஆன சாமியார் தான் ருத்ரசித்தர். இவர் கை வைத்தால் போதும் உடம்பு சரியில்லாதவர்களுக்கு கூட உடம் சரியாகிவிடுமாம்.

அப்படியாக இவர் சிங்கப்பூர் சென்ற போது, "இங்க ஒருத்தருக்கு உடம்பு சரியில்ல, கொஞ்சம் வந்து குணப்படுத்திட்டு போங்கன்னு" போன் வந்ததாம். அதையும் நம்பி அவர் சிசியை ஒருவருடன் அந்த வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு உள்ளே போனதும் " யாருக்கு குணப்படுத்தணும்னு" இவர் கேட்க. பின்னாடியில் இருந்த ஒருத்தர் கதவை சாத்த, நாற்காலியில் உட்காந்திருந்த பாடி பில்டர் சாமியார் எழுந்து வந்து நம்ப பட்டுக்கோட்டை சாமியார் கழுத்தில் இருக்கும் துண்டை இழுத்து பிடித்து கழுத்தோட நெரித்து, "ஏன்டா திருட்டு வேலையா பாக்குறீங்கன்னு, இப்படி ஊர ஏமாத்திட்டு திரியுற" என்று சினிமா சைக்கோ வில்லன் போல பேசுகிறார். நம்ப பட்டுக்கோட்டை சாமியாரோ, " அட நான் ஓட மாட்டேன், கழுத்தை நெறிக்காம பேசுயானு" கேட்குறாரு.

இந்த கேப்ல அவரின் சிசியை எப்படியோ கதவை திருக்க, "இதுக்காடா என்னைய கூட்டிட்டு வந்தீங்கன்னு எஸ்கேப் ஆகா ட்ரை பண்ணறார்" நம்ப சாமியார். ஆனா அவர் யாரு போதிய பில்டர் ஆச்சே அவர் தப்பிச்சு ஓடும் போது வேட்டியை கழட்டி நிர்வாணமா ஓட விட்டுட்டார். அதுனால பட்டுக்கோட்டை சாமியார் உயிர் பிழைச்சா போதும்னு அங்கிருந்து எஸ்கேப் ஆகிட்டாரு. இது நடந்து கொஞ்ச நாள் ஆகுது, ஆனா வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இது எதுக்காக நடந்ததுன்னு தான் இன்னும் யாருக்கும் தெரில. ஆனா இவங்க பக்கத்துல இருந்து சொல்றது என்னென்னா, இவருடைய வளர்ச்சி பிடிக்காமல் தான் அவர் அப்படி பன்னிருக்காருனு சொல்றாங்க.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்