Indian Railways : மதுரை – தேனி இடையே ரயில் சேவை இயக்குவதில் பெரும் சிரமங்களை சந்தித்து வருவதாக மதுரை கோட்ட மேலாளர் தெரிவித்துள்ளார்.
மதுரையிலிருந்து தேனி செல்வதற்காக 12 ஆண்டுகளுக்கு முன் மீட்டர்லைனாக செயல்பட்டு வந்த ரயில் சேவை பின்னர் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், இந்த ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் பணிகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில், அகல ரயில் பாதை பணிகள் முடிவடைந்த நிலையில் கடந்த மே 27ம் தேதி முதல் மதுரை to தேனி இடையே பயணிகள் ரயில் சேவை தொடங்கப்பட்டது. அதன்படி, தினமும் ஒருமுறை மதுரை to தேனி, தேனி to மதுரை இடையே இந்த ரயில் சேவை நடைபெற்று வருகிறது.
மேலும், இந்த ரயில் பாதையில் கடந்த 12 ஆண்டுகளாக ரயில்கள் செல்லாமல் இருந்ததால் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்துள்ளது. இந்நிலையில், தற்போது ரயில் சேவை தொடங்கப்பட்ட பின் மக்கள் ரயிலை கவனிக்காமல் தண்டவாளத்தில் நடந்து செல்வதாக கடந்த சில நாட்களாக புகார்கள் வந்தது.
இதுகுறித்து பேசிய மதுரை ரயில்வே கோட்ட மேலாளர், “ரயில் வரும்போது தண்டவாளத்தில் மக்கள் நடந்து செல்வதால் மதுரை to தேனி இடையே ரயில் இயக்குவது கடினமாக உள்ளது. மேலும் ரயில் 100 கி.மீ வேகத்தில் செல்லும் போது மக்கள் அருகில் நடந்து செல்கின்றனர். மேலும், ரயில் அருகே செல்பி எடுக்கின்றனர். ரயில் வருவது தெரிந்தும் தண்டவாளத்தில் நடந்தே செல்கின்றனர்” என தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…