தமிழகம் முழுவதும் ஜனவரி 9 முதல் 12 - ஆம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்றும் விடுபட்ட குடும்ப அட்டைதாரர்கள் ஜனவரி 13ம் தேதியன்று பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம்.மேலும் 17 மாவட்டங்களில் இருந்து ஒரு கரும்பு ரூ 33 க்கு இடைத் தரகர்கள் இல்லாமல் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படடுகிறது என உணவு துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்
சென்னை, கோபாலபுரம், கான்ரான்ஸ்மித் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக சேமிப்பு கிடங்கில் பொங்கல் பொருட்கள் விநியோகம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், குடும்ப அட்டைதாரர்கள் 2.19 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது. இன்று முதல் டோக்கன் வழங்கக் கூடிய பணி தொடங்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பாக ரூ.1,000 ரொக்கம், தலா ஒரு கிலோ அரிசி, சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கப்படும்.
வருகிற ஜனவரி 9-ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின், பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். அனைத்து மாவட்டங்களிலும் 9- ஆம் தேதி முதல் 12- ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு நியாய விலைக் கடைகளில் உங்கள் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ளது. ஜனவரி 12- ஆம் தேதிக்குள் பொங்கள் பரிசுத்தொகுப்பு பெற முடியாதவர்களுக்கும் வெளியூரில் வசிப்பவர்கள் மற்றும் விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜனவரி 13-ம் தேதியன்று பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…