Tue ,Jul 23, 2024

சென்செக்ஸ் 80,429.04
-73.04sensex(-0.09%)
நிஃப்டி24,479.05
-30.20sensex(-0.12%)
USD
81.57
Exclusive

காவு வாங்கிய கடன் தொல்லை; பூச்சி மருந்து கடைக்காரர் எடுத்த விபரீத முடிவு!

Editorial Desk Updated:
காவு வாங்கிய கடன் தொல்லை; பூச்சி மருந்து கடைக்காரர் எடுத்த விபரீத முடிவு! Representative Image.

சிதம்பரம் அருகே கடன் தொல்லையால் பூச்சி மருந்து கடை நடத்தி வருபவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

சிதம்பரத்தை அடுத்த சி. தண்டேஸ்வரநல்லுர் கிராமத்தில் வசித்து வந்த கணேசன் என்பவர் பூச்சி மருந்து கடை நடத்தி வருகிறார். கணேசனுக்கு கடன் பிரச்சனை இருப்பதாக தெரிகிறது, இதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்த அவர், மனைவி பிரபாவதி, 11 வயது மகள் சங்கமித்ரா, 8 வயது மகன் குருசரண் ஆகியோருக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். அதன்பின்னர் அன்னப்பன்பேட்டை கிராமத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரது மனைவி மற்றும் குழந்தைகள் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கணேசன் உடலை கைப்பற்றிய  புதுச்சத்திரம் போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்