திருப்பதியில் இன்று (ஜூன்1) முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதித்து தேவஸ்தானம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பதியில் சுற்றுசூழல் சீர்கேட்டை தடுக்கவும் இயற்கை வளத்தை மேம்படுத்தவும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் திருப்பதி தேவஸ்தானம் தடைவிதித்திருந்தது.
அதன்படி, திருமலையில் பிளாஸ்டிக் குடிநீா் பாட்டில்கள் விற்கத் தடை விதிக்கப்பட்டதுடன், அங்கு பொருள்கள் வாங்கும் பக்தா்களுக்கு நெகிழிப் பைகள் வழங்குவதற்கும், உணவகங்களில் நெகிழிப் பைகளில் உணவுப் பொருள்கள் கட்டித் தருவதற்கும் தடைவிதிக்கப்பட்டது.
இதன் படி திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு வைத்து கொடுக்கப்படும் நெகிழி பைகளுக்கு மாற்றுவழி கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து திருப்பதிக்கு வெவ்வேறு ஊர்களில் இருந்து வரும் பக்தர்கள் அங்கிருந்து கொண்டுவரும் பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் இதர பிளாஸ்டிக் பொருட்களை வீசிவிட்டு செல்கின்றனர், இது சுற்றுசூழலை பாதிக்கிறது என கூறி அதற்கு தடைவிதித்துள்ளது திருப்பதி தேவஸ்தான நிர்வாகம்.
அலிபிரியைச் சுற்றியுள்ள கடைகளிலும் நெகிழி குடிநீா் பாட்டில்கள், ஷாம்பு பாக்கெட்டுகள், 50 மைக்ரானுக்கு கீழ் உள்ள கவா்களை விற்க தேவஸ்தானம் புதன்கிழமை (ஜூன் 1) முதல் முற்றிலும் தடை விதித்துள்ளது. அதனால் அலிபிரி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியிலும் நெகிழிப் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. இதை மீறி நெகிழி தொடா்புடைய பொருள்களை விற்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…