பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென்னிம் இறுதிச் சடங்குகள் காந்திநகரில் உள்ள மயானத்தில் நடைபெற்றது. பிரதமர் மோடி, தனது தாயாரின் உடலுக்கு தீவைத்து கைகூப்பியபடி, இறுதி மரியாதை செலுத்தினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி டிசம்பர் 28ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று உயிரிழந்தார்.
100 வயதாகும் ஹீராபென் குஜராத் சட்டப் பேரவை தேர்தலின்போது வாக்களித்தார். முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 4ஆம் தேதி காந்திநகரில் உள்ள வீட்டிற்கு சென்று அவரிடம் ஆசி பெற்றிருந்தார்.
அகமதாபாத்தில் உள்ள யுஎன் மேத்தா இருதயவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் அவர் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை 3.30 மணி அளவில் இயற்கை எய்தினார். தாயின் மரண செய்தி குறித்து உருக்கமாக ட்விட்டரில் பதிவிட்ட பிரதமர் உடனே குஜராத் புறப்பட்டுச் சென்றார்.
அங்கு தாயின் உடலை இறுதிச்சடங்கிற்காக மயானம் நோக்கி தோளில் தூக்கிச் சென்ற பிரதமர் மோடி, அவருடயை அண்ணன் மற்றும் தம்பியுடன் இணைந்து இறுதி மரியாதை செலுத்தினார்.
#WATCH | Gujarat: Heeraben Modi, mother of PM Modi, laid to rest in Gandhinagar. She passed away at the age of 100, today.
— ANI (@ANI) December 30, 2022
(Source: DD) pic.twitter.com/wqjixwB9o7
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…