நேற்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அரசு துறையில் பணிக்கு சேரும் 71,000 பேருக்கு நியமனக் கடிதங்களை விநியோகிக்கிறார்.
ரோஸ்கர் மேளா என்னும் திட்டத்தின் மூலம் 2024 லோக் சபா தேர்தலுக்கு முன்னர் 10 லட்சம் பேருக்கு அரசு வேலை தர வேண்டும் என்று பிரதமர் கூறியிருந்தார். அதன் அடிப்படையில் நாடு முழுவதும் 45 இடங்களில் இந்த மேளா நடைபெறுகிறது. இத்திட்டத்தை மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேசங்கள் வரவேற்று அரசு வேலைகளில் ஆதிசேகரிப்பை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய ஆட்கள் - கிராமின் தக் சேவக்ஸ், இன்ஸ்பெக்டர் ஆஃப் போஸ்ட், கமர்ஷியல் கம்-டிக்கெட் கிளார்க், ஜூனியர் கிளார்க்-கம்-டைப்பிஸ்ட், ஜூனியர் அக்கவுண்ட்ஸ் கிளார்க், டிராக் மெயின்டெய்னர், உதவி பிரிவு அதிகாரி, கீழ் பிரிவு, எழுத்தர், துணைப்பிரிவு அலுவலர் மற்றும் வரி உதவியாளர்கள் போன்ற பல்வேறு பதவிகளில் சேருவார்கள். பிரதமர் அலுவலகம் வெளியிட்ட தகவல் படி, பிரதமர் வீடியோ கால் மூலம் மக்களுக்கு இந்த பதவி நியமனக் கடிதத்தை விநியோகம் செய்வார்.
இந்த திட்டத்தின் முக்கியத்துவமானது படிப்பு முடித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி அவதிப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தால் பல்வேறு அரசுத் துறைகளில் புதிதாக நியமனம் செய்யப்படுபவர்களுக்கு ஆன்லைன் நோக்குநிலைப் பாடமான கர்மயோகி பிரரம்ப் மூலம் தங்களைப் பயிற்றுவிப்பதற்கான வாய்ப்பையும் பெறுவார்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…