Politic News : தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் குறித்து இந்திய பிரதமர் மோடி விஜயகாந்த் மனைவி பிரேமலதாவிடம் விசாரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் பிரபல நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த கடந்த சில ஆண்டுகளாக உடல்நல குறைவால் ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில் அவரது கட்சியின் முக்கிய ஆலோசனை கூட்டங்களில் கலந்து கொண்டு எதுவும் பேசாமல் அமர்ந்தே இருப்பார். இதனையடுத்து, கடந்த வாரத்தில் அவரது உடல்நிலை மோசமாகி வருவதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், சமீபத்தில் விஜயகாந்த் உடலில் சர்க்கரை அளவு அதிகமாகி உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் மருத்துவர்கள் அவரது வலது காலில் இருந்து விரல்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர். இச்செய்தி அவரது தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து, விஜயகாந்த பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என அரசியல் தலைவர்கள் மற்றும் சக நடிகர்களும் வேண்டி வருகின்றனர்.
அதன்படி, தற்போது தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் குறித்து இந்திய பிரதமர் மோடி விஜயகாந்த் மனைவி பிரேமலதாவிடம் தொலைபேசியில் விசாரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விஜயகாந்துக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டு தெரிந்துக்கொண்டு பின்னர் விஜயகாந்த் விரைவில் குணமடைந்து ஆரோக்கியமாக வாழ பிரார்த்தனை செய்ததாகவும் பிரேமலதாவிடம் கூறியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…