Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

5ஜி நெட்வொர்க் இன்று முதல் ஆரம்பம்…. இனி எல்லாம் ஜெட் வேகம் தான்...

Gowthami Subramani October 01, 2022 & 10:55 [IST]
5ஜி நெட்வொர்க் இன்று முதல் ஆரம்பம்…. இனி எல்லாம் ஜெட் வேகம் தான்...Representative Image.

இன்று முதல் 5ஜி சேவையைப் பயன்படுத்துவதற்கான தகவல் தொடர்பு சேவையை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொடங்கி வைக்கிறார்.

புதிய தகவல் தொழில்நுட்ப சேவை தற்போது நடைமுறைக்கு வர உள்ளது. தற்போது உருவாகி வரும் புதிய தொழில்நுட்பங்கள், நாட்டின் வளர்ச்சிக்காக மேம்படுத்தப்படும் நோக்கத்தில் பயன்படுகின்றன. அதன் படி, நாட்டில் 2ஜி, 4ஜி அறிமுகமாகி தற்போது 5ஜி கொண்டு வருவதற்கான நடைமுறைகள் கையாளப்பட்டன.

5ஜி நெட்வொர்க் இன்று முதல் ஆரம்பம்…. இனி எல்லாம் ஜெட் வேகம் தான்...Representative Image

அதன் படி, இன்று காலை டெல்லி பிரகதி மைதானத்தில் இந்த புதிய தகவல் தொழில்நுட்ப சேவையான 5ஜி சேவைக்கு தொடக்க விழா நடைபெறுகிறது. இந்த தொழில்நுட்பத்தின் மூலம், மக்களுக்கு தடையற்ற சேவைகளை உயர் தர விகிதத்தில் விரைவான செயல்பாடுகளை வழங்கக்கூடிய நம்பகமான தகவல் தொடர்புகளை வழங்க முடியும். இதன் மூலம், ஆற்றல் திறன், அலைக்கற்றை திறன் போன்றவையும் அதிகரிக்கும்.

5ஜி நெட்வொர்க் இன்று முதல் ஆரம்பம்…. இனி எல்லாம் ஜெட் வேகம் தான்...Representative Image

இந்த 5ஜி தொடக்க விழாவில், ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி, ஏர்டெல் நிறுவன தலைவர், வோடஃபோன் ஐடியா நிறுவன தலைவர் போன்றோர் பங்கேற்பர் என கூறப்படுகிறது. இதில், ஒவ்வொரு நிறுவனமும் இந்த புதிய அலைக்கற்றைக்கான டெமோவை வழங்குகிறது.

5ஜி நெட்வொர்க் இன்று முதல் ஆரம்பம்…. இனி எல்லாம் ஜெட் வேகம் தான்...Representative Image

அதன் படி, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், மும்பை நகரத்தில் உள்ள பள்ளி ஆசிரியரை, மகாராஷ்டிரா, ஒடிசா, மற்றும் குஜராத் போன்ற வெவ்வேறு நகரங்களில் உள்ள மாணவர்களுடன் இணைத்து, தொடர்பு கொள்ள வைக்கிறது. இதன் மூலம், மாணவர்களுக்கான கல்வி வசதி, தொலைவைக் கடந்து விரைவாக சேர்க்க வைக்க முடியும் என்பதைக் காட்ட உள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்