Mon ,Feb 06, 2023

சென்செக்ஸ் 60,841.88
0.00sensex(0.00%)
நிஃப்டி17,866.90
12.85sensex(0.07%)
USD
81.57
Exclusive

ஒரே நாடு ஒரே சீருடை.. மத்திய அரசின் அடுத்த அதிரடி?

Sekar October 28, 2022 & 17:18 [IST]
ஒரே நாடு ஒரே சீருடை.. மத்திய அரசின் அடுத்த அதிரடி?Representative Image.

பிரதமர் நரேந்திர மோடி இன்று நடந்த மாநில உள்துறை அமைச்சர்களுக்கிடையேயான மாநாட்டில் காவல்துறையினருக்கான “ஒரே நாடு, ஒரே சீருடை” யோசனையை முன்வைத்தார். இது பரிசீலனைக்கான பரிந்துரை மட்டுமே என்றும் அதை மாநிலங்கள் மீது திணிக்க முயற்சிக்கவில்லை என்றும் அவர் கூறினார். 

மாநில உள்துறை அமைச்சர்களின் “சிந்தன் ஷிவிர்” நிகழ்ச்சியில் உரையாற்றிய மோடி, குற்றங்கள் மற்றும் குற்றவாளிகளை சமாளிக்க மாநிலங்களுக்கு இடையே நெருக்கமான ஒத்துழைப்பை பரிந்துரைத்தார். கூட்டுறவு கூட்டாட்சி என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் உணர்வு மட்டுமல்ல, மாநிலங்கள் மற்றும் மத்திய அரசின் பொறுப்பும் கூட என்றார்.

“ஒரே தேசம், காவல்துறைக்கான ஒரே சீருடை என்பது ஒரு யோசனை மட்டுமே. நான் அதை உங்கள் மீது திணிக்க முயற்சிக்கவில்லை. சற்று சிந்தித்து பாருங்கள். இது நடக்கலாம், 5, 50 அல்லது 100 வருடங்களில் நடக்கலாம். ஆனால் கொஞ்சம் யோசிப்போம்” என்று மோடி கூறினார். 

நாடு முழுவதும் உள்ள காவல்துறையின் அடையாளம் ஒரே மாதிரியாக இருப்பது தான் சரியாக இருக்கும் என்று தான் கருதுவதாக பிரதமர் கூறினார். 

ஏற்கனவே மத்திய அரசு ஒரே நாடு ஒரே ரேஷன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், பிரதமர் மோடி ஒரே நாடு ஒரே சீருடை திட்டத்தை திணிக்கவில்லை என்று கூறினாலும், சட்டம் ஒழுங்கு மாநில விவகாரமாக இருந்தாலும், அதில் தேச நலன் மற்றும் ஒற்றுமை அடங்கியுள்ளது எனக் கூறியுள்ளதால், இந்த ஒரே நாடு ஒரே சீருடை கருத்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்