நாம் சிறுவயதில் ரசித்து கேட்ட பாடல்கள் மற்றும் 90'ஸ் ஹிட்ஸ்களின் பேவரைட் பாடல்களில் பலவற்றை எழுதியது கவிஞர் வைரமுத்துவாகத்தான் இருப்பார். அதில் நாம் சாதாரணமாக நினைத்து பாடிய பாடல்கள் பள்ளிகள் மற்றும் பொது வெளிகளில் முனுமுனுத்த பாடல்களுக்குள் இவ்வளவு பெரிய இரட்டை அர்த்தங்கள் இருக்கிறதா என நாம் யோசித்திருக்க மாட்டோம்.
அப்படி வைரமுத்து எழுதிய இரட்டை அர்த்த பாடல்கள் சிலவற்றைத்தான் தற்போது பார்க்க உள்ளோம். இதற்கு அர்த்தங்கள் எதுவும் கொடுக்கப்பட மாட்டாது நீங்களே புரிந்துகொள்ளுங்க. புரிஞ்சுப்பீங்கன்னு நினைக்கிறன்..
அவற்றில் சில...
2005 ஆம் ஆண்டு நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான மழை படத்தில் இடம்பெற்றிருக்கும் மண்ணிலே மண்ணிலே என்ற பாடலில் இடம்பெற்றிருக்கும் இந்த வரிகள்..
முன் கோபுர அழகை
உன் தாவணி மூடியதே
உன் ரகசியத்தை மழை துளி
அம்பலம் ஆக்கியதே...
1998 ஆம் ஆண்டு நடிகர் பிரஷாந்த் நடிப்பில் வெளியான ஜீன்ஸ் படத்தில் இடம்பெற்ற பாடல் ஹைர ஹைர ஹேரபா. இந்த பாடலில் இடம்பெற்றிருக்கும் வரும் வரிகளான...
பெண்ணே உனது
மெல்லிடை பார்த்தேன்
அடடா பிரம்மன் கஞ்சனடி
சற்றே நிமிர்ந்தேன் தலை
சுற்றிப் போனேன் ஆஹா
அவனே வள்ளலடி..
2005ஆம் ஆண்டு நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான அந்நியன் படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடலான அண்டங்காக கொண்டகாரி என்ற பாடலில் இடம்பெற்றிருக்கும் இந்த வரிகள்..
சுட்ட பால் போல
தேகம் தாண்டி உனக்கு
அதில் பாலாடை
மட்டும் கொஞ்சம் விலக்கு...
அதே அந்நியன் படத்தில் இடம்பெற்ற பாடல் ஐய்யங்காரு வீட்டு அழகே அந்த பாடலில் வரும் வரிகள்...
வான் மழையில் நனைந்தால் பயிர்கள் உருவாகும்
ஆண் மழையில் நனைந்தால் உயிர்கள் உருவாகும்
2000ஆம் ஆண்டு வெளியான படம் ரிதம் இந்த படத்தில் அர்ஜுன் நாயகனாக நடித்திருப்பார், இந்த படத்தில் நீரை மையப்படுத்தி ஒரு பாடல் இடம்பெற்றிருக்கும் அந்த பாடலில் வரும் வரிகளை இப்படி எழுதியிருப்பார் வைரமுத்து.
வண்ண வண்ண பெண்ணே வட்டமிடும் நதியே
வளைவுகள் அழகு உங்கள் வளைவுகள் அழகு
ஹோ. மெல்லிசைகள் படித்தல் மேடு பள்ளம் மறைத்தல்
நதிகளின் குணமே அது நங்கையின் குணமே..
2002ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான படம் ரெட் இந்த படத்தில் அனைவரின் பேவரைட் பாடலான ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி. இந்த பாடல் வரிகளை முணுமுணுக்காதா நாட்களே இருக்காது, அப்படிப்பட்ட பாடலின் வரிகளில் இது போன்ற வரிகளை இணைத்திருப்பார் வைரமுத்து...
பழுத்தாச்சு
நெஞ்சம்பழம் பழுத்தாச்சு
அணில் கிட்ட குடுத்தாச்சு
அணில் இப்ப துள்ளி குதிக்கலாம்
அப்பப்பா பல்லும் பதிக்கலாம்..
1992 ஆம் ஆண்டு அரவிந்த் சாமி நடிப்பில் வெளியான ரோஜா படத்தில் இடம்பெற்ற பாடலான
புது வெள்ளை மழை
இங்கு பொழிகின்றது இந்தக்
கொள்ளை நிலா உடல்
நனைகின்றது இங்கு சொல்லாத
இடம் கூடக் குளிா்கின்றது மனம்
சூடான இடம் தேடி அலைகின்றது..
1999 ஆன் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான படையப்பா படத்தில் இடம்பெற்ற பாடல் சுத்தி சுத்தி வந்தீக... அந்த பாடலில் இடம் பெரும் வரிகளான
கண்ணால் எதயோ பாத்தீக, காயா பழமா கேட்டீக...
இது போன்ற இன்னும் கணக்கில் அடங்கா இரட்டை அர்த்த பாடல் வரிகளை தமிழ் திரையுலகில் வைரமுத்து எழுதியுள்ளார். பலர் இது புரிந்தும் புரியாதது போல் இருந்துவிடுவார்கள். ஆனால் புரியாதவர்கள் எந்த இடம் என்று பார்க்காமல் பாடலை பாடியும் முணுமுணுத்து வருகின்றனர். இனிமேல் கொஞ்சம் உஷாரா இருங்க இந்த பாடலை பாடும்போது...
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…