Mon ,Dec 11, 2023

சென்செக்ஸ் 69,924.63
99.03sensex(0.14%)
நிஃப்டி21,002.90
33.50sensex(0.16%)
USD
81.57
Exclusive

சட்டவிரோதமாக கைது செய்யப்பட்ட நபர்...ரூ.5 லட்சம் இழப்பீடு..!

madhankumar June 02, 2022 & 14:22 [IST]
சட்டவிரோதமாக கைது செய்யப்பட்ட நபர்...ரூ.5 லட்சம் இழப்பீடு..!Representative Image.

காவல்துறையினரால் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில், பாதிக்கப்பட்ட நபருக்கு இழப்பீடாக ஐந்து லட்சம் ரூபாய் வழங்க தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த உதயகுமார் என்பவர் அளித்த புகாரில், சென்னை கோயம்பேட்டில் மருந்துக்கடை வைத்திருக்கும் தன்னை கடந்த 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி, பசுபதி என்பவர் காணாமல் போனதாக கூறி விசாரிக்க அழைத்து சென்றனர். அந்த நபர் குறித்து தனக்கு ஏதும் தெரியாது எனக் கூறியும், அதைக் கேட்காமல்  தன்னை தனியார் இடத்தில் அடைத்து வைத்து, நிர்வாணமாக்கி அடித்து துன்புறுத்தியதாகவும், ஆபாச வார்த்தைகளால் திட்டியதாகவும், பொய் வழக்கில் தன்னை சிறையில் அடைத்ததாகவும் கூறியுள்ளார்.

இது குறித்து காவல்துறை தரப்பில் அடித்து துன்புறுத்தி நிர்வாணப்படுத்தியது என அவர் கூறும் குற்றசாட்டுகள் பொய் எனவும் தன மீதுள்ள வழக்கை திசை திருப்பவே இவ்வாறு கூறுகிறார் என எதிர்மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த புகாரை விசாரித்த மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், மனித உரிமை மீறல் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறி,   பாதிக்கப்பட்ட உதயகுமாருக்கு 5லட்சத்து 75ஆயிரம் ரூபாய் இழப்பீட்டை 8 வார காலத்திற்குள் வழங்க வேண்டுமெனவும், இந்த தொகையை சம்பந்தப்பட்ட காவலர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்