இந்தியாவில் அதிகரித்து வரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்த விரைவில் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டு சட்டம் கொண்டு வரப்படும் என மத்திய அமைச்சர் பிரஹலாத் சிங் படேல் தெரிவித்தார்.
ராய்ப்பூரின் பரோண்டாவில் உள்ள ஐசிஏஆர்-நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் பயோடிக் ஸ்ட்ரெஸ் மேனேஜ்மென்ட்டில் நடந்த கரீப் கல்யாண் சம்மேளனில் கலந்து கொண்டபோது அமைச்சர் இந்த கருத்தைத் தெரிவித்துள்ளார்.
மக்கள் தொகைக் கட்டுப்பாடு குறித்த சட்டம் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, “விரைவில் கொண்டு வரப்படும், கவலைப்பட வேண்டாம். அத்தகைய வலுவான மற்றும் பெரிய முடிவுகள் எடுக்கப்பட்டால், மீதமுள்ளவற்றிலும் அதேபோல் முடிவு எடுக்கப்படும்." என முந்தைய ஆர்ட்டிகிள் 370, சிஏஏ போன்ற சட்டங்களை மறைமுகமாக குறிப்பிட்டு அவர் தெரிவித்தார்.
சத்தீஸ்கரில் ஆளும் காங்கிரஸ் சில மத்திய திட்டங்களின் கீழ் இலக்குகளை அடையத் தவறிவிட்டதாகக் கூறி அவர் மாநில காங்கிரஸ் அரசையும் விளாசினார்.
“ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் மாநில அரசு 23 சதவீத வேலைகளை மட்டுமே அடைய முடிந்தது. இந்த திட்டத்தின் கீழ் இலக்கை அடைந்ததில் தேசிய சராசரி 50 சதவீதமாக உள்ளது. மாநிலத்தில் நீர் ஆதாரங்களில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் பிரச்சனை மேலாண்மை தான். அதேபோல், பிரதமர் ஆவாஸ் திட்டத்தின் கீழ் இலக்கை மாநிலத்தால் முடிக்க முடியவில்லை.'' என்றார்.
முன்னதாக, கரீபா கல்யாண் சம்மேளனின் போது பல்வேறு மத்திய திட்டங்களின் பயனாளிகளுடன் உரையாடிய படேல், கடந்த 8 ஆண்டுகளில் நரேந்திர மோடி அரசின் பல்வேறு சாதனைகளை எடுத்துரைத்து, 'சேவை, நல்ல நிர்வாகம் மற்றும் ஏழைகளின் நலன்' என்பதே மத்திய அரசின் அடிப்படை மந்திரம் என தெரிவித்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…