தமிழகத்தில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதை அடுத்து வீடுகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது.
இந்தியா முழுவதும் வீடு இல்லாமல் தவித்து வரும் மக்களுக்கான தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 2015ம் ஆண்டு முதல் ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. 2022ம் ஆண்டு இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதாக தமிழக அரசுக்கு 3வது இடம் வழங்கப்பட்டது.
தற்போது தமிழகத்தில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்துக்காக வீடுகளற்ற மற்றும் குடிசைகளில் வாழும் குடும்பங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி இன்று முதல் தொடங்கியுள்ளது. சமூக பொருளாதாரம், ஜாதிவாரி கணக்கெடுப்பு, கலைஞ்ர் வீடு வழங்கும் திட்டம் ஆகியவற்றின் மூலம் புதிய குடிசைகள் குறித்து கணக்கெடுக்கும் பணித் தொடங்கியுள்ளது.
தென்னங்கீற்று, பனை ஓலை, வைக்கோல் ஆகியவற்றால் மேயப்பட்ட குடிசை வீடுகள் மட்டுமின்றி, நினைத்த நன்மையற்ற மற்றும் வாழத் தகுதியற்ற வீடுகளையும் கணக்கெடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கணக்கெடுக்கும் பணியில் கிராம ஊராட்சித் தலைவர். கிராமநிர்வாக அலுவ லர், ஊராட்சி செயலாளர், சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் பிரதிநிதி ஆகிய 5 பேர் கொண்ட குழு மேற்கொள்ள வேண்டுமென தமிழக அரசு அறிவித்துள்ளது.
டிசம்பர் 31ம் தேதிக்குள் கணக்கெடுப்பை முடிக்க வேண் டுமென உத்தரவிட்டுள்ள தமிழக அரசு, கணக்கெடுக்கும் பணியை அடுத்த ஆண்டு ஜனவரி 9ம் தேதிக்குள்ளும், கணக்கெடுப்புக்கான பட்டியலை இறுதி செய்யும் பணியை ஜனவரி 17ம் தேதிக்குள் முடிக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…