Sun ,Dec 10, 2023

சென்செக்ஸ் 69,825.60
303.91sensex(0.44%)
நிஃப்டி20,969.40
68.25sensex(0.33%)
USD
81.57
Exclusive

அரசியல் வாரிசு என்றாலும் சரி.. முதல்வர் பதவியை கொடுத்தாலும் சரி… இவங்களுக்கு நான் வேலை செய்ய மாட்டேன்…!

Gowthami Subramani October 06, 2022 & 17:00 [IST]
அரசியல் வாரிசு என்றாலும் சரி.. முதல்வர் பதவியை கொடுத்தாலும் சரி… இவங்களுக்கு நான் வேலை செய்ய மாட்டேன்…!Representative Image.

“பீஹார் முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்தாலும் சரி. நிதிஷ் குமாருக்காக வேலை செய்ய மாட்டேன்” என அரசியல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

அரசியல் வியூக வகுப்பாளரும், ஐபேக் நிறுவனருமான பிரசாந்த் கிஷோர், “ஜன் சூரஜ்” என்ற யாத்திரையை பீஹாரில் தொடங்கியுள்ளார். இந்த யாத்திரை 3,500 கிமீ தூர யாத்திரை ஆகும். கடந்த புதன்கிழமை அன்று, ஜமுனியா கிராமத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரசாந்த் கிஷோர் பேசினார்.

இதில் அவர், “கடந்த சில நாள்களுக்கு முன்பு, நிதிஷ்குமாரை சந்தித்த போது அவர் மீண்டும் என்னை ஐக்கிய ஜனதாதளத்தில் வந்து வேலை பார்க்குமாறு கேட்டுக் கொண்டார். நீ என்னுடைய அரசியல் வாரிசு. ஜன் சூரஜ் யாத்திரையை கைவிட வேண்டும் என தெரிவித்தார். ஆனால் நான், அவர் என்னை அவரது அரசியல் வாரிசாக அறிவித்தாலும் சரி, முதல்வர் பதவியை எனக்காக விட்டுக் கொடுத்தாலும் சரி இனி அவருடன் பணியாற்ற முடியாது என திட்டவட்டமாக கூறிவிட்டேன். நான் மக்களுக்கு உறுதி கொடுத்துள்ளே. அதனை மாற்ற முடியாது” என தெரிவித்தார்.

இவர் கடந்த அக்டோபர் 2 ஆம் நாள் காந்தி ஜெயந்தி அன்று பீஹாரில் உள்ள காந்தி ஆசிரமத்தில் தனது யாத்திரையைத் தொடங்கினா. இந்த யாத்திரைப் பயணத்தில் இவர் அடிக்கடி நிதிஷ் குமாரின் பெயரை குறிப்பிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்து, அந்தக் கட்சியின் தேசிய துணை தலைவராக செயல்பட்டார். குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக கட்சித் தலைவரான நிதிஷ் குமாருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்