Wed ,Nov 29, 2023

சென்செக்ஸ் 66,901.91
727.71sensex(1.10%)
நிஃப்டி20,096.60
206.90sensex(1.04%)
USD
81.57
Exclusive

BREAKING : அடுத்த ஜனாதிபதி யார்.. தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்!!

Sekar June 09, 2022 & 15:36 [IST]
BREAKING : அடுத்த ஜனாதிபதி யார்.. தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்!!Representative Image.

குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறும் என்றும், ஜூலை 21 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று தெரிவித்துள்ளது. 

செய்தியாளர் கூட்டத்தில் பேசிய இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். தற்போதுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

அரசியலமைப்புச் சட்டத்தின் 62வது பிரிவின்படி, அடுத்த குடியரசுத் தலைவருக்கான தேர்தல், தற்போதைய குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் முடிவதற்குள் நடத்தப்பட வேண்டும். கடைசியாக 2017ஆம் ஆண்டு, இந்திய குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் ஜூலை 17ஆம் தேதி நடந்து, ஜூலை 20ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

லோக்சபா, ராஜ்யசபா, மாநில எம்எல்ஏக்கள் மற்றும் டில்லி மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசங்களின் எம்எல்ஏக்களை உள்ளடக்கிய தேர்தல் கல்லூரியின் உறுப்பினர்களால் ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

சட்ட மேலவை உறுப்பினர்கள் மற்றும் நியமன உறுப்பினர்கள் இந்த தேர்தலில் வாக்குப்பதிவு செய்ய அனுமதியில்லை. நாட்டிலேயே உத்தரபிரதேசம் இந்த தேர்தல் கல்லூரியில் அதிக வாக்கு மதிப்பைக் கொண்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்