Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,488.99
0.00sensex(0.00%)
நிஃப்டி21,995.85
0.00sensex(0.00%)
USD
81.57
Exclusive

காதலர் வாரம்: 2வது நாள் ப்ரப்போஸ் டே ஏன்? எதற்கு? | Propose Day 2023 Special

Nandhinipriya Ganeshan Updated:
காதலர் வாரம்: 2வது நாள் ப்ரப்போஸ் டே ஏன்? எதற்கு? | Propose Day 2023 SpecialRepresentative Image.

காதலின் மாதம் என்றாலே அது பிப்ரவரி தான். ஏனென்றால் அனைவரும் தங்கள் காதலை வெளிப்படுத்தவும், கொண்டாடவும் காத்திருக்கும் லவ்வர்ஸ் டே 'பிப்ரவரி 14' இந்த மாதத்தில் தான் வருகிறது. இதை நான் சொல்ல உங்களுக்கு தெரியவேண்டியதில்லை. ரோஸ் டேயில் தொடங்கி காதலர் தினம் வரை ஒரு வாரம் கொண்டாடப்படும் இந்த காதல் கொண்டாட்டம் காதலர்களுக்கு ஒரு திருவிழா போலதான் இருக்கும். இந்த 7 நாட்களில் ஒவ்வொரு நாளும் ஒரு பரிசையும், ஒரு கொண்டாட்டத்தையும் குறிக்கிறது. அந்தவகையில், இரண்டாவது நாளான ப்ரொப்போஸ் டே எதற்காக கொண்டாடப்படுகிறது என்று தெரிந்துக்கொள்வோம்.

காதலர் வாரம்: 2வது நாள் ப்ரப்போஸ் டே ஏன்? எதற்கு? | Propose Day 2023 SpecialRepresentative Image

ப்ரப்போஸ் டேயில் காதலிப்பவர்கள் ஒருவருக்கொருவர் பரிசுகளை கொடுத்து தங்களது அன்பை பரிமாறிக்கொள்வார்கள். அதுமட்டுமல்லாமல், ஒருபுறமாக (oneside) காதலித்துக் கொண்டிருப்பவர்களுக்கு இது பெரிய வாய்ப்பு என்றே சொல்லலாம். அதாவது, தான் காதலிக்கும் பெண் அல்லது ஆணுக்கு ப்ரப்போஸ் செய்வதற்கான நேரம். காதலை லவ்வரிடம் கூறியதும், மனதில் இருந்த மிகப்பெரிய பாரத்தை இறக்கி வைத்தது போல் இருக்கும். 

காதலர் வாரம்: 2வது நாள் ப்ரப்போஸ் டே ஏன்? எதற்கு? | Propose Day 2023 SpecialRepresentative Image

ஆனால், இதில் இன்னொரு சிக்கலும் இருக்கிறது. அதாவது நீங்கள் ப்ரப்போஸ் செய்பவர் உங்கள் காதலை ஏற்றுக்கொண்டால் பிரச்சனை இல்லை. அதுவே மறுத்துவிட்டால் மனம்தளராமல் மீண்டும் முயற்சி செய்யுங்கள். நிச்சயம் உங்கள் மனதை புரிந்துக் கொள்வார்கள். மறுத்துவிட்டார்களே என்பதற்காக தவறான செயலில் ஈடுபடுவது உங்கள் காதலின் உண்மைத்தன்மையையே கெடுத்துவிடுவதற்கு சமம். 

காதலர் வாரம்: 2வது நாள் ப்ரப்போஸ் டே ஏன்? எதற்கு? | Propose Day 2023 SpecialRepresentative Image

இந்த ப்ரப்போஸ் டே என்பது புதியதாக காதல் சொல்வதற்கும் கொண்டாடப்படுவது இல்லை. ஏற்கனவே காதலிப்பவர்களும், திருமண ஜோடிகளும் கொண்டாடலாம். உங்க பார்ட்னருக்கு பிடித்த பொருளை வாங்கிக் கொடுத்து அவர்களை மேலும் இம்ப்ரஸ் செய்யலாம். காதலை வெளிப்படுத்த காலம், நேரம் தேவையா என்ன? 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்