Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

அடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த ஏரியாக்கள் பக்கம் போய்டாதீங்க! 

KANIMOZHI Updated:
அடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த ஏரியாக்கள் பக்கம் போய்டாதீங்க! Representative Image.

மாண்டஸ் புயல் சென்னையை நெருங்கி வரும் நிலையில் சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு எந்தெந்த ஏரியாக்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளார். 

சென்னைக்கு தென்கிழக்கே 270 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து கிழக்கு - தென்கிழக்கே 200 கிலோ மீட்டர் தொலைவில் புயல் மையம் நிலைகொண்டுள்ளது. மணிக்கு 13 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் தீவிர புயலான மாண்டஸ் அடுத்த 3 மணி நேரத்திற்குள் வலுவிழந்து புயலாக மாறக்கூடும் என்றும்,  இன்று இரவு புயல் கரையைக் கடக்கும் போது 65 முதல் 85 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

மாண்டஸ் புயலானது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு 11.30 மணிக்குள் அல்லது நாளை அதிகாலை 2.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் புதுச்சேரிக்கும் - ஸ்ரீஹரிக்கோட்டாவிற்கும் இடைப்பட்ட இடத்தில் மாமல்லபுரத்தை ஒட்டியுள்ள இடத்தில் கரையைக் கடக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக சென்னையைப் பொறுத்தவரை அம்பத்தூர், கிண்டி,வேளச்சேரி, அம்பத்தூர், மாதவரம், திருவொற்றியூர் ஆகிய பகுதிகளில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளது. 

காஞ்சிபுரத்தில் உத்திரமேரூர், வாலாஜாபாத், குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர், பூவிருந்தவல்லி ஆகிய பகுதிகளில் மிதமான மழைக்கும், செங்கல்பட்டில், செங்கல்பட்டு மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள், வண்டலூர், மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

திருவள்ளூரைப் பொறுத்தவரை திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, ஊத்துக்கோட்டைபகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்