Sun ,Dec 04, 2022

சென்செக்ஸ் 62,868.50
-415.69(-0.66%)
நிஃப்டி18,696.10
-116.40(-0.62%)
USD
81.57
Exclusive

புதிய ஆபத்து... உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி… வெளியான பலத்த எச்சரிக்கை…

Gowthami Subramani November 09, 2022 & 15:15 [IST]
புதிய ஆபத்து... உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி… வெளியான பலத்த எச்சரிக்கை…Representative Image.

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல், காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக, அடுத்த 48 மணி நேரத்தில் சற்றே வலுப்பெற்று, தமிழகம் மற்றும் புதுவை கடற்கரையை நோக்கி அடுத்த மூன்று தினங்களில் நகரக் கூடும். இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமான மழை முதல் மிக கனமழை பெய்யக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் படி இன்றைய வானிலை அறிக்கையில் குறிப்பிட்டதாவது,

09.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுஇகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடிமின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. கன்னியாகுமரி, இருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம்‌, புதுக்கோட்டை, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

10.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுஇகளில்‌ அநேக இடங்களில்‌ இடிமின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. தாத்துக்குடி, இராமநாதபுரம்‌, தஞ்சாவூர்‌, சிவகங்கை, புதுக்கோட்டை, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை, கடலூர்‌, விழுப்புரம்‌, செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம்‌, திருவள்ளூர்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரி, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

11.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை , செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், தேனி, மதுரை, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

12.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, திருவள்ளூர், சென்னை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், சேலம், கரூர், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

13.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான - கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

சென்னையைப் பொறுத்த வரை:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

Also Read: Rain News Today : அடுத்த 3 மணி நேரம் தமிழகத்தில் கன மழை…!

Tag: Rain News Today In Tamil | Tamilnadu Rain News In Tamil | Rain News Today In Tamilnadu | Today News Rain Holiday In Tamilnadu | Today Rain News In Tamil Nadu In Tamil | Reason For Rain In Tamilnadu Today | Tomorrow Rain In Tamilnadu | How Many Days Rain In Tamilnadu | Today Rain In Tamilnadu In Tamil | Rain Status Today In Tamil Nadu | Reason For Rain In Tamilnadu | Rain News Today Live | Tamil Nadu Rain News In English | Rain In Tamilnadu This Week | Rain News Today In Chennai | Rain In Tamil Nadu Tomorrow | Reason For Rain In Tamilnadu Today | Today Rain News In Chennai Tamil | Today Coimbatore Rain News In Tamil | 19 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்