தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு தொடர்ச்சியாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று மற்றும் நாளை 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, தென்காசி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர் ஆகிய 14 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல் பகுதிகளில் மேல் நிலவும் கீழடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது, ஜூன் 5, 6, 7 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் அதிகபட்சமாக பெரம்பலூரில் 4 செமீ, குமரபாளையத்தில் 3 செமீ மழை பதிவாகியுள்ளது என்றும் வானிலை மையம் தகவல் கூறியுள்ளது.
மேலும் இன்றும் நாளையும் குமரிக்கடல், மன்னர் வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதிகள் ஆகியவற்றில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவித்துள்ளது. ஜூன் 7 ஆம் தேதி அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…