Sun ,Dec 10, 2023

சென்செக்ஸ் 69,825.60
303.91sensex(0.44%)
நிஃப்டி20,969.40
68.25sensex(0.33%)
USD
81.57
Exclusive

முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் இரண்டாவது நாளாக ஆலோசனை....!

madhankumar June 19, 2022 & 12:41 [IST]
முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் இரண்டாவது நாளாக ஆலோசனை....!Representative Image.

அக்னிபாத் திட்டம் தொடர்பாக இரண்டாவது நாளாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்திவருகிறார்.

இந்திய ராணுவத்தில் அக்னிபாத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இந்த திட்டத்தின் கீழ் 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் 50 ஆயிரம் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, 4 ஆண்டுகளுக்கு பின் பனி முடிந்த பின் விடுவிக்கப்படுவர், இதில் 25 சதவிகிதம் பேருக்கு முப்படைகலீல் சேர்க்கப்படுவர். இந்நிலையில் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநிலங்களில் பல்வேறு இடங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பீகார், உபி போன்ற மாநிலங்களில் 12 ரயில்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளன.

பல இடங்களில் வன்முறை வெடித்துள்ளது. இதனால் ரயில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அக்னிபத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் அக்னி வீரர்களுக்கு, நான்கு ஆண்டுகளுக்கு பின்னும் பல்வேறு துறைகளில் வேலை வழங்குவது பற்றி மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் ஆலோசனை நடத்தி வருகின்றன. துணை ராணுவம் மற்றும் அசாம் துப்பாக்கிப்படையில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது.

இந்நிலையில் அக்னிபாத் திட்டம் தொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் இன்று இரண்டாவது நாளாக ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில், கடற்படை தளபதி ஹரி குமார், விமானப்படை தளபதி சவுத்ரி ஆகியோர் பங்கேற்றனர். ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டேவுக்கு பதில், துணை ராணுவ தளபதி ராஜு பங்கேற்றார். மேலும் இந்த கூட்டத்தில் இத்திட்டம் அறிமுகப்படுத்துவது, இதில் உள்ள சவால்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்