ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று சுமார் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிப்பதற்கான அனுமதி சீட்டு பெற்று கடலுக்குச் சென்றனர். தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த அந்தோணி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் இருந்த மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களின் படகில் எஞ்சின் கோளாறு ஏற்பட்டு, அங்குள்ள பாறை பகுதியில் சிக்கியது.
அப்போது, அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படை, விசைப்படகில் தவித்துக்கொண்டிருந்த ஒன்பது ராமேஸ்வரம் மீனவர்களையும் கைது செய்து, மேல் விசாரணைக்காக இலங்கை கடற்கரை முகாமிற்கு அழைத்து சென்றது. இலங்கை கடற்படையால் 9 மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் ராமேஸ்வரம் பகுதி மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய, மாநில அரசு இலங்கை அரசுடன் பேசி, கைதான மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…