Wed ,Dec 06, 2023

சென்செக்ஸ் 69,296.14
431.02sensex(0.63%)
நிஃப்டி20,855.10
168.30sensex(0.81%)
USD
81.57
Exclusive

பாண்டே மீது திரும்பிய சந்தேகம்..! டிசம்பர் 4ம் தேதியே இறந்த ஜெ. எப்படி தெரியும்?

UDHAYA KUMAR October 18, 2022 & 20:25 [IST]
பாண்டே மீது திரும்பிய சந்தேகம்..! டிசம்பர் 4ம் தேதியே இறந்த ஜெ. எப்படி தெரியும்?Representative Image.

டிசம்பர் 4ம் தேதி மாலையிலேயே நேரலையில் முதல்வர் ஜெயலலிதா மரணித்தார் என்பதை அறிவித்த ரங்கராஜ் பாண்டே மீது சந்தேகம் எழுந்துள்ளதாக நெட்டிசன்கள் பேசி வருகின்றனர். இதனால் பாண்டே விசாரிக்கப்படுவாரா என கேள்வி எழுந்துள்ளது. 

2016 டிசம்பர் 5ம் தேதி இரவு 11.30 மணி அளவில் ஜெயலலிதா இறப்பு குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டது. ஆனால் ஒரு நாள் முன்னதாகவே தந்தி தொலைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே நேரலையில் இதனை தெரிவித்து அதிர்ச்சியூட்டினார். அவர் இந்த செய்தியை மாலை 3.50 மணி அளவில் அறிவித்தார். ஆனால் பின்னர் அந்த செய்தி மீண்டும் மாற்றப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார். உயிருக்கு போராடி வருகிறார் என்று மாற்றப்பட்டது. 

இந்நிலையில், ஆறுமுகசாமி ஆணையம் ஜெயலலிதா டிசம்பர் 4ம் தேதியே இறந்துவிட்டார் என்பதை அறிவித்துள்ளது. இதனால் அவரது இறப்பு ஏன் தாமதமாக அறிவிக்கப்பட்டது? இந்த விசயம் சரியான நேரத்தில் ரங்கராஜ் பாண்டேவுக்கு எப்படி தெரிந்தது என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்