இன்று முதல் தமிழகத்தில் உள்ள அணைத்து ரேஷன்கடை ஊழியர்களும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 3 நாட்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வரும் அரசு நியாயவிலைக் கடை பணியாளர்கள் தொடர் வேலை நிறுத்தம் மற்றும் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ள நிலையில், ரேஷன் பொருட்கள் வினியோகம் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாக உள்ளது.
ரேஷன் கடை ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு, நியவில்லை கடைகளுக்கு தனித்துறை, பொட்டல முறை, என்பது போன்ற ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடையடைப்பு மற்றும் வேலை நிறுத்த போரத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் ‘நோ வொர்க் நோ பே’ என்கிற கொள்கையடிப்படையில், போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களின் சம்பளம் பிடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் ஜூன் 7,8,9 ஆகிய தேதிகளை தொடர்ந்து ஜூன் 13 முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது என தகவல் வேலையானது. இதனால் இன்று முதல் 8,9 ஆகிய 3 நாட்களைத் தொடர்ந்து மே 13ம் தேதியும் தொடர் கடையடைப்பு போராட்டம் நடைபெற இருப்பதால் நியாய விலைக் கடைகளில் பொருட்கள் வினியோகம் முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…