நேற்று இந்தியாவில் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஆட்சியின் போது கருப்புப்பணம், தீவிரவாத செயல்பாடுகளுக்கு பணம் செலுத்துவதை தடுக்கவும் மற்றும் பண மதிப்பிளப்பை தடுக்கவும் ரூ.500/- மற்றும் ரூ.1000/- நோட்டுக்கள் செல்லாது என்று கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி அன்று அறிவித்தார். மேலும் அதற்கு பதிலாக புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாக மக்கள் மத்தியில் 2000 ரூபாய் தாள்களின் புழக்கம் குறைந்துள்ளது. இதனால் புதிதாக 2000 ரூபாய் நோட்டுக்களை அச்சிடுவதை ரிசர்வ் வங்கி நிறுத்தப்போவதாக ஏற்கனவே தெரிவித்துள்ளது. ஆனால் அந்த முடிவை ரிசர்வ் வங்கி நடைமுறை படுத்தவில்லை. தற்போது மக்கள் மத்தியில் 2000 ரூபாய் நோட்டுக்களுக்கான புழக்கம் குறைவாக இருப்பதாக பேசப்படுகிறது. எனவே, நேற்று ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் தாள்களை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. பொது மக்கள் மே 23 ஆம் தேதி முதல் வங்கியில் 2000 ரூபாய் நோட்டுகளை கொடுத்து மாற்றிக்கொள்ளலாம். செப்டம்பர் 30 ஆம் தேதி தான் கடைசி தேதி மற்றும் ஒரு நாளைக்கு ஒரு நபர் ரூ.20,000/- வரை 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…