தமிழக ஆளுநர் பதவியிலிருந்து ஆர்.என்.ரவியை நீக்க வலியுறுத்தி, காஞ்சிபுரத்தில் மதிமுக சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
சென்னையில் நடைபெற்ற மதிமுகவின் 29வது பொதுக்குழுவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பொறுப்பில் இருந்து நீக்குமாறு குடியரசு தலைவரிடம் கேட்டுக் கொள்ளும் கையெழுத்து இயக்கம் நடத்துவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, இன்று தமிழக முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பில் இருந்து ஆர்.என்.ரவியை நீக்க கோரி மதிமுக சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, காஞ்சிபுரம் மாவட்ட மதிமுக சார்பில் மதிமுக மாநில துணை பொது செயலாளர் மல்லை சத்யா தலைமையில் சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்தில் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி மாபெரும் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. இதில் திமுக, விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளுடன் கையெழுத்திட்டு, நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து பேரணியாகச் சென்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…