குடியரசு தினம் நமது நாட்டின் மிக முக்கியமான தேசிய நிகழ்வுகளில் ஒன்று. இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமலாக்கப்பட்டதை நினைவுக்கூரும் வகையில் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் தேதி நாடு முழுவதும் குடியரசு தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அந்தவகையில், நாளை நமது நாட்டின் 74வது குடியரசு தின விழா கொண்டாடப்படவுள்ளது. உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவிக்க இந்த பதிவில் குடியரசு தின கவிதைகளை பதிவிட்டுள்ளோம், அதை அனைவருக்கும் பகிர்ந்து நமது தேசப்பற்றை வெளிப்படுத்துவோம்.
பதான் படத்தில் இப்படி ஒரு விசயமா? திரை விமர்சனம்!
மொழி, மதம் என எத்தனை பிரிவுகள்
இருந்தாலும் நாம் அனைவரும் பாரதத்தாயின்
பிள்ளைகள் தான்.
இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்.
குடியரசு தேசம் நம் தேசம்
நெடும் புகழ் ஓங்கி ஒளி வீசும்
அன்பின் வழியில் நாம் சென்றோம்
அஹிம்சையால் அதை வென்றோம்.
எத்தனை கோபம்
எத்தனை வருத்தம்
எத்தனை எத்தனை
இருப்பினும் நாடு நம் நாடு
என்பது மட்டும் மாறாத
உணர்வாய் வாழ்க நம் பாரதம்
இந்தியன் என்பது நம் பெருமை,
வேற்றுமையில் ஒற்றுமை என்பது நம் மகிமை,
நம்மை பிரிந்து சிறுமை படுத்தும் தீய சக்திகளை
வேரருத்து இந்தியன் என்று பெருமை கொள்வோம்.
வேற்றுமையில் ஒற்றுமையும்,
பன்முக கலாச்சாரமும் நம் நாட்டின் முக்கியத்துவம்,
அதனை காப்பது நம் கடமை.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…