நம் இந்திய நாடு குடியரசு நாடாக அங்கீகரிக்கப்பட்டு இந்த வருத்தத்துடன் 74 ஆண்டுகள் நிறைவாகிவிட்டது. 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று முதல் முறையாக இந்தியா குடியரசு நாடாக மாற்றப்பட்டது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் அதனை கொண்டாட பல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் எந்த மாறியான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பதை விரிவாக பாப்போம்.
1955 ஆம் ஆண்டு முதல் குடியரசு தின அணிவகுப்பானது டெல்லியில் உள்ள ராஜ்பாத் இடத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 'கர்தவ்ய பாதை' என பெயர்மாற்றம் செய்தார். எனவே, இந்த ஆண்டு பெயர் மாற்றம் செய்யப்பட்ட பின்பு கொண்டாடப்படும் முதல் குடியரசு தின அணிவகுப்பாக திகழ்கிறது. அதனால் பல தடபுடலான ஏற்பாடுகளுடன் இந்த வருடம் கொண்டாடப்படும் என்று கருதப்படுகிறது.
ஒவ்வொரு குடியரசு தினத்தன்றும் இந்திய நாட்டின் முப்படையில் இருக்கும் வீரர்கள் இயந்திரங்களுடன் அணிவகுத்து செல்வது வழக்கம். இந்த ஆண்டு நம்மை கௌரவிக்கும் விதமாக, கர்தவ்யா பாதையில் 120 பேர் கொண்ட எகிப்திய ஆயுதப் படைக் குழு தலைமை விருந்தினராக அணிவகுத்துச் செல்ல உள்ளது. அதனை மேற்பார்வையிட எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தாஹ் எல் சிசி வருகை தர இருக்கிறார்.
2023 ஆம் ஆண்டு குசியாராசு தின அணிவகுப்பில் ஃப்ளைபாஸ்ட் 50 விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களைக் காணலாம், அதில் 23 போர் விமானங்கள் என்று இந்திய விமானப்படையின் (IAF) மேற்கு விமானப்படையின் செய்தித் தொடர்பாளர் இந்திராணி நந்தி தெரிவித்துள்ளார். விளக்கமாக சொல்ல வேண்டுமெனில் ஒன்பது ரஃபேல் போர் விமானங்கள், 50 விமானங்களில், எட்டு போக்குவரத்து விமானங்கள், 18 ஹெலிகாப்டர்கள் மற்றும் ஒரு பழங்கால டகோட்டா விமானம் ஆகியவை பறக்க உள்ளன.
கடற்படை
இந்திய கடற்படையில் 42 ஆண்டுகளாக சேவை புரிந்துள்ள IL-38 கடல்சார் ரோந்து விமானம் முதலும் கடைசியுமாக கர்தவ்யா பாதையில் அணிவகுக்க உள்ளன.
கொரோனாவிற்கு முந்தைய காலம் வரை குடியரசு தின அணிவகுப்பை பார்வையிட 1 லட்சத்திற்கும் மேலான இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் கொரோனாவுக்கு பின்னர் இருக்கைகள் முற்றிலும் குறைக்கப்பட்டு 45,000 ஆக அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு விஐபி-கள் குடியரசு அணிவகுப்பை பார்வையிடுவதற்கான அழைப்பிதழை ஆன்லைன் முறையில் பெற்றுக்கொள்ள வழிவகுத்துள்ளது. மேலும் இந்த 45,000 இருக்கைகளில் 32,000 இருக்கைகள் பொதுமக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதிலும் மத்திய விஸ்டா, கர்தவ்ய பாதை, புதிய நாடாளுமன்றக் கட்டிடம், பால் மற்றும் காய்கறி வியாபாரிகள், தெருவோர வியாபாரிகள் என சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் சிறப்பு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன.
பீட்டிங் ரிட்ரீட்டின் போது மாலை ரைசினா ஹில்ஸ் உச்சியில் 3,500 உள்நாட்டு ஆளில்லா விமானங்களை உள்ளடக்கிய ட்ரோன் ஷோ வானத்தை ஒளிரச் செய்யும். இது தான் இந்தியாவின் மிக பிரமாண்டமான ட்ரோன் ஷோவாக இருக்கும் என்று தெரிவிக்கின்றனர். மேலும், முதல் முறையாக, வடக்கு மற்றும் தெற்கு பிளாக்கின் முகப்பில் பீட்டிங் ரிட்ரீட்டின் போது 3-டி அனமார்பிக் ப்ரொஜெக்ஷன் ஏற்பாடு செய்யப்படுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…