இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு, தமிழகத்தில் சாதனையாளர்களுக்கு முதல்வர்.மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கி கௌரவித்தார்.
சென்னையில் உள்ள கடற்கரை சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே, குடியரசு தினத்தை ஒட்டி, ஆளுநர் கொடியேற்றும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.
ஆளுநர் ஆர்.என்,ரவி கொடியேற்றி வைத்து, ராணுவ படைப்பிரிவு, கடற்படை, ராணுவம், விமானப்படை, சி.ஐ.எஸ்.ப்., சி.ஆர்.பி.எப்., தமிழ்நாடு சிறப்பு காவல் பிரிவு, தமிழ்நாடு பேரிடர் நிவாரண படை, கடலோர பாதுகாப்பு குழு, ஊர்க்காவல் படை உள்ளிட்ட பல்வேறு படைப்பிரிவினரின் அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார்.
இதையடுத்து நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கி கௌரவித்தார். விருது பெற்றவர்களின் பட்டியல் பின்வருமாறு:-
வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம் - தலைமை காவலர் சரவணன், ஆண் செவிலியர் ஜெயக்குமார், தூத்துக்குடியை சேர்ந்த அந்தோணிசாமி, கன்னியாகுமரியை சேர்ந்த ஶ்ரீகிருஷ்ணன், தஞ்சாவூரை சேர்ந்த செல்வம்.
கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம் - கோவையைச் சேர்ந்த இனாயத்துல்லா.
வேளாண்துறை சிறப்பு விருது - திருத்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தினை கடைபிடித்து அதிக உற்பத்தியை பெற்றதற்காக, பொன்னமராவதியை சேர்ந்த வசந்தா.
காந்தியடிகள் காவலர் பதக்கங்கள் - காவல் ஆய்வாளர் பிரியதர்ஷினி, ஆய்வாளர் ஜெயமோகன், உதவி ஆய்வாளர்கள் சகாதேவன், இனாயத் பாஷா, தலைமைக் காவலர் சிவகனேசன்.
சிறந்த காவல் நிலையத்திற்கான முதலமைச்சரின் விருது - திருப்பூர் வடக்கு, திருச்சி கோட்டை மற்றும் திண்டுக்கல் வட்ட காவல் நிலையங்கள்
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…