Thu ,Feb 29, 2024

சென்செக்ஸ் 72,500.30
195.42sensex(0.27%)
நிஃப்டி21,982.80
31.65sensex(0.14%)
USD
81.57
Exclusive

காரைக்குடியில் மாடியில் இருந்து தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டிய மாணவி மீட்பு

Baskarans Updated:
காரைக்குடியில் மாடியில் இருந்து தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டிய மாணவி மீட்பு Representative Image.

காரைக்குடியில்  மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற மாணவியை 1 மணி நேரத்திற்கு  பிறகு தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் போலீசார் மீட்டனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கலைஞர் சாலையில் வசிப்பவர் ரவிச்சந்திரன். ஆட்டோ ஓட்டுநரான, இவரது மகள் காவியாஸ்ரீ(17) பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு கல்லூரி செல்ல உள்ள நிலையில் மகள் தொடர்ந்து செல்போனில் மூழ்கியதை பார்த்த தந்தை ரவிச்சந்திரன் கண்டித்து செல்போனை பறித்ததாக  கூறப்படுகிறது.

இதில் ஆத்திரமடைந்த மகள் காவியா குடியிருக்கும் வாடகை வீட்டு மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொள்ளப் போவதாக  ஏறி நின்று மிரட்டினார். இதையடுத்து காவல்துறை, தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து வந்த காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மாணவியிடம் கீழே இறங்கி வருமாறு கூறினர். ஆனால் அவர் இறங்காததால், மாணவியை  சாமர்த்தியமாக தீயணைப்பு வீரர்  உதவியுடன் சிறப்பு உதவி காவல் பெண் ஆய்வாளர் அன்னக்கிளி மீட்டு மாணவிக்கு அறிவுரை கூறி தந்தையிடம் சேர்த்தனர்.

மாணவி ஒருவர் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கட்டிடத்தின் மேல் இருந்து குதிப்பேன் என்று தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்