Indian Railways : இந்தியா முழுவதும் செயல்படும் ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகள் எவ்வளவு ‘லக்கேஜ்’ கொண்டு செல்ல வேண்டும் என சில கட்டுப்பாடு உள்ளது. இந்நிலையில், பயணத்திற்கும் ‘லக்கேஜ்’ கொண்டு செல்லும் அளவு மாறுபடுகிறது. அதன்படி, முதல் வகுப்பு ஏசி முதல் 2-ம் வகுப்பு சாதாரண படுக்கை வசதி வரை உள்ள பயணிகளுக்கு என தனித்தனியாக எத்தனை கிலோ ‘லக்கேஜ்’ கொண்டு செல்லலாம் என சில விதிமுறைகள் உள்ளது.
ஆனால், இதுவரை இந்திய ரெயில்வே நிர்வாகம் லக்கேஜ் கொண்டு செல்வது குறித்து பெரிதாக கண்டு கொள்ளவில்லை. ஆனால் தற்போது ‘லக்கேஜ்’ அளவை கட்டுப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ரெயில்களில் சமீப காலமாக ‘சங்கிலி’ இழுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் சக பயணிகள் சிரமப்படுகின்றனர். இதனால், அதிக அளவு உடைமைகளை எடுத்துச் செல்ல அனுமதிக்கக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரெயில் பயணத்தின் போது அதிக அளவு உடைமைகளை எடுத்துச் செல்ல வேண்டாம் என பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரெயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உடைமைகள் அதிகமாக இருந்தால் பயணத்தின் போது இன்பம் பாதியாக இருக்கும். அதிக உடைமைகளை ஏற்றிக்கொண்டு ரெயிலில் பயணம் செய்ய வேண்டாம். உடைமைகள் அதிகமாக இருந்தால் பார்சல் அலுவலகத்திற்கு சென்று அதனை முன்பதிவு செய்யுங்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, ரெயில்களில் அளவுக்கு அதிகமாக எடுத்துச் செல்லும் உடைமைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் ரெயில்வேதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, ஏ.சி. முதல் வகுப்பில் 70 கிலோ, ஏ.சி. 2-வது வகுப்பு 50 கிலோ, ஏ.சி. 3-வது வகுப்பு 40 கிலோ வரை ‘லக்கேஜ்’ எடுத்துச் செல்லலாம். 2-ம் வகுப்பு படுக்கை வசதி 40 கிலோ, பொது வகுப்பில் பயணிப்பவர்கள் 35 கிலோ மட்டுமே கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேல் எடுத்து செல்லும் உடைமைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் ரயில்வேதுறை தெரிவித்துள்ளது.
இதையும் மீறி அதிக உடைமைகளுடன் பயணித்தால் தனி கட்டணத்தை அபராதத்துடன் செலுத்த வேண்டும். மேலும், இது பயண தூரத்துக்கு ஏற்பமாறுபடும் என ரெயில்வேதுறை தெரிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…