US Trending News : அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவம் அதிகரித்துள்ள நிலையில், இனி அமெரிக்காவில் துப்பாக்கி வாங்க பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. அதன்படி, சமீபத்தில் டெக்சாஸ் மாகாணத்தில் யுவால்டி நகரில் உள்ள ராப் ஆரம்பப்பள்ளிக்குள் துப்பாக்கியுடன் நுழந்த 18 வயது இளைஞன் பள்ளிக்குழந்தைகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார். இச்சம்பவத்தில் 19 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் உட்பட 21 பேர் உயிரிழந்தனர்.
இதனையடுத்து, கடந்த சில வாரங்களுக்கு முன் அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் பப்பலோ நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் ஒரு நபர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிசூட்டில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், அமெரிக்கா புளோரிடா மாகாணத்தில் 2 வயது சிறுவன் துப்பாக்கியை வைத்து விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது எதிர்பாரத விதமாக தனது தந்தையை துப்பாக்கியால் சுட்டுள்ளான். இதில் சம்பவ இடத்திலே அவனது தந்தை ரெஜி மாப்ரி உயிரிழந்தார்.
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவம் அதிகரித்துள்ள நிலையில், கைத்துப்பாக்கி சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என சட்டம் இயற்றுபவர்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், நியூயார்க் மாகாணத்தில் துப்பாக்கி வாங்குவதற்கான வயது வரம்பை உயர்த்தி சட்டம் இயற்றியுள்ளனர். அதன்படி, 21 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் துப்பாக்கி விற்பனை செய்ய வேண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…