Sat ,Mar 02, 2024

சென்செக்ஸ் 73,806.15
60.80sensex(0.08%)
நிஃப்டி22,378.40
39.65sensex(0.18%)
USD
81.57
Exclusive

தனியார் பள்ளியில் இருந்து எடுத்து சென்ற பொருட்களை திரும்பி கொடுங்க....தண்டோரா மூலம் எச்சரிக்கை..!

madhankumar July 21, 2022 & 11:03 [IST]
தனியார் பள்ளியில் இருந்து எடுத்து சென்ற பொருட்களை திரும்பி கொடுங்க....தண்டோரா மூலம் எச்சரிக்கை..!Representative Image.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக நடந்த கலவரத்தின்போது அந்த பள்ளியில் இருந்த பொருட்களை போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் எடுத்து சென்றனர். இந்நிலையில் அந்த பொருட்களை எல்லாம் திரும்ப தருமாறு வருவாய்த்துறை கிராமம் கிராமமாக சென்று தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுத்துவருகிறது.

சுமார் 2000 பேர் கலந்துகொண்ட இந்த போராட்டத்தில் பள்ளியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை அனைத்து சூறையாடப்பட்டன. மேலும் போலீசார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த கலவரத்தை பயன்படுத்தி கொண்டு பள்ளிக்கு அருகில் இருந்த பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பள்ளிக்குள் இருந்த மேஜை, நாற்காலிகள், வகுப்பறைகளில் இருந்த டேபிள், பென்ச், சமையல் பாத்திரங்கள், ஏசி இயந்திரங்கள், கணினிகள் என கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் தூக்கி சென்றனர்.

இந்நிலையில் கலவரம் நடந்தபொழுது பள்ளியில் இருந்து தூக்கிச்சென்ற பொருட்களையெல்லாம் பள்ளி வளாகத்தின் அருகே வந்து போட்டு செல்லுமாறு தண்டோரா மூலம் கிராமம் கிராமமாக வருவாய்த்துறையினர் கூறியுள்ளனர். அந்த தண்டோரா அறிவிப்பில் சக்தி பள்ளியில் இருந்து கலவரம் நடக்கும்போது எடுத்து சென்ற பொருட்களையெல்லாம் அங்கேயே போட்டுவிடுங்கள் இல்லையென்றால் போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என கூறியுள்ளனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்