Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

காதலர் வாரம்: முதல் நாளே ரோஸ் டே ஏன்? எதற்கு? | Rose Day 2023 Special

Nandhinipriya Ganeshan Updated:
காதலர் வாரம்: முதல் நாளே ரோஸ் டே ஏன்? எதற்கு? | Rose Day 2023 SpecialRepresentative Image.

பிப்ரவரி மாதம் என்றதுமே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது காதலர் தினம் தான். ஒரு வாரம் கொண்டாடப்படும் இந்த அழகிய தருணத்தை அனுபவிக்க காதலர்கள் ஆர்வத்துடன் காத்திருப்பார்கள். அதை காதலர் வாரம் என்பார்கள். அந்த காதலர் வாரத்தின் முதல் நாளே 'ரோஜா தினம்'. இது ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 7 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ரோஜா தினம் என்றவுடன் அனைவருக்கும் கண் முன் வந்து செல்வது ''காதலர் தினம்'' திரைப்பட பாடல் வரிகள் தான். 

காதலர் வாரம்: முதல் நாளே ரோஸ் டே ஏன்? எதற்கு? | Rose Day 2023 SpecialRepresentative Image

அந்த படத்தில் வரும் ஒவ்வொரு பாடலுக்கும் நாம் என்றுமே அடிமை என்றே சொல்லலாம். அதுவும் அப்படத்தில் வரும் 'ரோஜா ரோஜா' என்ற பாட்டு இந்த ரோஸ் டே -க்கு பக்காவாக பொருந்தும். காதலித்துக் கொண்டிருப்பவர்கள், திருமண ஜோடிகள், வயதான ஜோடிகள் என்று அனைவரும் தினந்தோறும் மனதிற்கு பிடித்தவர்களிடம் அன்பை வெளிப்படுத்தினாலும் இந்த நாளன்று வெளிப்படுத்துவது உண்மையில் ஒரு ஸ்பெஷலான தருணமாக கொண்டாடப்படுகிறது.

காதலர் வாரம்: முதல் நாளே ரோஸ் டே ஏன்? எதற்கு? | Rose Day 2023 SpecialRepresentative Image

முதல் நாளே ரோஸ் டே ஏன்?

காதல் என்றாலே ஒரு மென்மையான விஷயம். அதனால் தான் காதலை பூக்களுடன் ஒப்பிடுகிறார்கள். இந்த ரோஜா தினத்தில், ரோஜாப் பூக்களை தங்கள் மனதிற்கு பிடித்தவர்களுக்கு பரிசாக வழங்குவார்கள். இது வெறும் பூக்களின் பரிமாற்றம் மட்டுமல்லாமல், காதலின் பிணைப்பைத் தெரிவிக்கும் அன்பின் குறியீடாகவும், இரு இதயங்களின் காதல் கதை தொடக்கமாகவும் விளங்குகிறது. காதல் கதையின் தொடக்கமாக அமைவதால் தான் காதல் வாரத்தின் முதல் நாளாக ரோஸ் தினம் கொண்டாடப்படுகிறது.

காதலர் வாரம்: முதல் நாளே ரோஸ் டே ஏன்? எதற்கு? | Rose Day 2023 SpecialRepresentative Image

எத்தனையோ வண்ணங்களில் ரோஜா பூக்கள் இருந்தாலும், அவை ஒவ்வொன்றும் ஒரு அம்சத்தைக் குறிக்கிறது. அதாவது, சிவப்பு கலர் ரோஜாக்கள் காதல் மற்றும் ஒருவரின் அன்பின் வெளிபாடாக அமைகிறது. மஞ்சள் கலர் ரோஜாக்கள் நட்புக்கு பிரதிநிதித்துவமாக அமைகிறது. வெள்ளை நிற ரோஜாக்கள் ஒரு புதிய ஆரம்பத்திற்காகவும் அல்லது திருமணத்திற்காகவும் வழங்கப்படுகிறது. 

நீங்களும் உங்க அன்புக்குரியவருக்கு ஒரு ரோஜா பூவை பரிசாக கொடுத்து, வாழ்க்கையின் மறக்க முடியாத தருணமாக மாற்றுங்கள். ஹேப்பி ரோஸ் டே!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்