புதுச்சேரியில் ஹெல்மெட் இன்றி வாகனம் ஓட்டினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது பின்வருமாறு :- புதுச்சேரியில் 2019 முதல் 2021 வரை புதுவையில் 3,410 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இருசக்கர வாகனங்களில் 2 பேர் மட்டுமே பயணம் செய்ய அனுமதி உள்ள நிலையில், பயணம் செய்யும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிவது அவசியம். இருசக்கர வாகனம் விற்பனை செய்யும்போது, அத்துடன் தரமான ஹெல்மெட் விற்பனை செய்யும் முறையும் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : அடேங்கப்பா.. பிக் பாஸ் செட்டு வேற லெவல்ல இருக்கும்போலையே..
வாகனம் ஓட்டும்போது செல்போன் உபயோகிப்பது நமது புலன்களின் திறனை 50 சதவீதம் குறைக்கும் என்பதால் எந்த வாகனம் ஓட்டும்போதும் செல்போன் பேசுவதை தவிர்க்கவேண்டும். வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசுவோருக்கும், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவோர் மற்றும் பயணிப்போருக்கும் முதல்முறை ரூ.1,000 அபராதம் மட்டுமின்றி 3 மாதம் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : பலாத்காரம் செய்யப்பட்ட 12 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை.. உ.பி. அவலம்!!
புதுவையில் சமீப காலமாக சிறுவர்கள் இருசக்கர வாகனத்தை ஓட்டுனர் உரிமம் இல்லாமல் ஓட்டி செல்வது அதிகரித்து வரும் நிலையில், அவர்கள் வாகனத்தை இயக்க சட்டப்படி அனுமதியில்லை. சிறுவர்கள் பெற்றோர்களின் அனுமதியுடன் வாகனத்தை ஓட்டியதாக தெரிகிறது. அவ்வாறு வாகனம் ஓட்டும் சிறுவர்களின் பெற்றோருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும்.
இதையும் படிங்க : ஆட்டுக்காக நடந்த அக்கப்போர்.. கொலையில் முடிந்த கொடூரம்.. கோவையில் பகீர்!!
மேலும் வாகனத்தின் பதிவு சான்றிதழ் ஒரு வருடம் வரை ரத்து செய்யப்படுவதோடு, வாகனத்தை ஓட்டிய சிறுவர்களுக்கு 25 வயது வரை எல்எல்ஆர் மற்றும் லைசென்ஸ் பெறும் தகுதி ரத்து செய்வதோடு, சிறார் சட்டத்தின் கீழ் வழக்கும் தொடரப்படும்.
இதையும் படிங்க : மிலாது நபியன்று சோகம்.. மின்சாரம் தாக்கி 6 பேர் பலி!!
பொதுமக்கள் அனைவரும் தகுதியான ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டுவது, அதிவேகமாக ஓட்டுவது, மது அருந்திவிட்டு ஓட்டுவது, செல்போனில் பேசிக்கொண்டு ஓட்டுவது மற்றும் தவறான திசையில் ஓட்டுவது சட்டப்படி குற்றமாகும். 2 நபர்களுக்கு மேல் இருசக்கர வாகனத்தில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாரு சாமி நீ.. ஹெல்மெட் போட்டு தள்ளுவண்டியில் காய்கறி விற்பனை செய்யும் இளைஞர்..
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…