ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே, நாட்டில் அதிகரித்து வரும் வருமான சமத்துவமின்மை மற்றும் வேலையின்மை குறித்து கவலை தெரிவித்தார். வறுமை நமக்கு முன்னால் பேய் போன்ற சவாலாக உள்ளது என்று வலியுறுத்தினார்.
எனினும், இந்த சவாலை எதிர்கொள்ள கடந்த சில ஆண்டுகளில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஹொசபலே கூறினார். ஆத்மநிர்பர் பாரத் மற்றும் எஃப்பிஓ, ஜன்தன் யஜனா போன்ற மத்திய அரசின் பல முயற்சிகள் மற்றும் சுகாதாரம் மற்றும் டிஜிட்டல் புரட்சி தொடர்பான திட்டங்களைப் பாராட்டுவதாக அவர் கூறினார்.
ஆர்எஸ்எஸ் துணை நிறுவனமான சுதேசி ஜாக்ரன் மஞ்ச் (எஸ்ஜேஎம்) ஏற்பாடு செய்திருந்த ஒரு வெபினாரில் உரையாற்றிய ஹோசபாலே, "20 கோடி பேர் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளனர் என்பது வருத்தமளிக்கும் விஷயம், அதுமட்டுல்ல மேலும் 23 கோடி பேர் நாள் ஒன்றுக்கு ரூ.375க்கும் குறைவாகவே சம்பாதிக்கின்றனர். வறுமை என்பது பேய் போன்ற சவால் நம் முன் உள்ளது. இந்த பேயை நமக்கு கொல்வது முக்கியம்." என்று கூறினார்.
முந்தைய அரசாங்கங்களின் தவறான பொருளாதாரக் கொள்கைகளே பொருளாதாரத்தில் உள்ள இந்த ஏற்றத் தாழ்வுகளுக்கு காரணம் என்று அவர் குற்றம் சாட்டினார். வறுமை தவிர சமத்துவமின்மை மற்றும் வேலையின்மை ஆகியவை மற்ற இரண்டு சவால்களாகும் என்றும் அவர் கூறினார்.
"நாட்டில் நான்கு கோடி வேலையில்லாதவர்கள் உள்ளனர். கிராமப்புறங்களில் 2.2 கோடி மற்றும் நகர்ப்புறங்களில் 1.8 கோடி பேர் உள்ளனர். தொழிலாளர் கணக்கெடுப்பில் வேலையின்மை விகிதம் 7.6 சதவீதமாக உள்ளது. வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு அகில இந்திய திட்டங்கள் மட்டுமல்லாது உள்ளூர் திட்டங்களும் தேவை." என அவர் மேலும் கூறினார்.
கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பை அதிகரிக்க குடிசைத் தொழில்கள் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையில் அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என ஹோசபலே பரிந்துரைத்தார்.
உலகின் முதல் ஆறு பொருளாதாரங்களில் ஒன்றாக இருந்தாலும், நாட்டின் மக்கள்தொகையில் பாதி பேர் மொத்த வருமானத்தில் 13 சதவீதத்தை மட்டுமே கொண்டிருப்பது நல்ல விஷயமா என்று அவர் கேள்வியெழுப்பினார்.
கிராமப்புற மட்டத்தில் வேலைகளை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டிய ஹோசபலே, இந்த நோக்கத்துடன் எஸ்ஜேஎம் ஸ்வாவலம்பி பாரத் அபியான் என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது என்றார்.
இந்த திட்டத்தின் மூலம், கிராம அளவில் திறன் மேம்பாடு மற்றும் சந்தைப்படுத்துதலுடன், விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் புதிய முயற்சிகளை எடுக்க எஸ்ஜேஎம் முயற்சி செய்யும் என்றார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…